அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன் நகர மண்டபத்தில் (Preston City Hall, Gower Street, Preston 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும் அனைத்துலகப் பெண்கள் தின விழாவில் கருத்தரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - நினைவரங்கு மற்றும், பெண்ணியச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலமைந்த “அசோகவனத்தில் கண்ணகி” என்ற நாடகமும் - அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி, தமிழினி சிவகாமி ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும் இடம்பெறவுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.