அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - பச்சை தேவதை - இரண்டாம் ஜாமங்களின் கதை முதலான நூல்களையும் எழுதியிருக்கும் எழுத்தாளர் சல்மா, தமிழ்நாடு சமூகநல வாரியத்தலைவராகவும் பணியாற்றியவர். கவிஞர் சல்மாவுடனான இலக்கியக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களையும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்- ஊடகவியலாளர்கள் - சமூகச்செயற்பாட்டாளர்களையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.