பெரும் மதிப்பிற்குரிய உலகத் தொல்காப்பிய மன்றத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சுநாட்டுத் தலைநகர் பாரிசில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த விரிவான அறிக்கையை தமிழ் / ஆங்கிலம் என இருமொழிகளிலும் இணைத்துள்ளோம். நம் மன்ற அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகின்றோம். முன்னதாகத் தெரிவித்தால் தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்யவும், நிகழ்ச்சியை வடிவமைக்கவும் வாய்ப்பாக இருக்கும். தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றவும், தொல்காப்பிய அறிஞர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கவும் எண்ணியுள்ளோம். நிகழ்ச்சியை வடிவமைப்பது தொடர்பில் அன்பர்களின் வழிகாட்டலை எதிர்பார்க்கின்றோம்.
மாநாட்டுக்குழுவின் சார்பில்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.