தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கணநூலாகும். பண்டைத் தமிழ் மொழி, இலக்கியம், வாழ்க்கைமுறை, அரசியல், பண்பாடு; முதலான பல்வேறு விடயங்களை விளக்கி இலக்கணம் கூறும் முதல் நூல் தொல்காப்பியமே. இந்நூல் தமிழினத்தின் தொன்மை அடையாளத்தை ஆவணப்படுத்தும் பெரும் செல்வம். அதனை அமைப்பு ரீதியாக உலகமயப்படுத்தி அதனூடாகத் தொல்காப்பியக் கல்வியைப் பரப்புதல், தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை உலகறிச் செய்தல் ஆகிய குறிக்கோள்களுடன் ‘அனைத்துலகத் தொல்காப்பியம் மன்றத்தின் தொடக்க விழா பாரிஸ்மாநகரில் 27.09.2015இல் நடைபெற்றுள்ளது. உலகளாவிய நிலையில் அறிஞர் பலர் அதில் பங்குபற்றினர். கனடாவிலிருந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் அம்மகாநாட்டிற் பங்குபற்றினார். தொல்காப்பிய மன்ற மூதறிஞர் குழுவில் பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் அகிலேசனார். பேராசிரியர் இ. பாலசுந்தரம், பேராசிரியர் சிவமணி, ஆகியோருடன் இலங்கை, சிங்கப்பூர், இலண்டன, தமிழ்நாடு, மலேசியா ஆகிய இடங்களிலிருந்தும் பல அறிஞர்; இடம்பெற்றுள்ளனர்;. அனைத்துலகத் தொல்காப்பியம் மன்றத்தின் கனடாக்கிளை அங்குரார்ப்பணம் திங்கட்கிழமை, ஒக்டோபர் 26ஆம் திகதி; பி.ப 6.30ஸ்காபரோவிலுள்ள GTA MALL இரண்டாம் மாடியில் இடம்பெறவுள்ளது. இதில் இணைந்துகொள்ள விரும்பும் இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். திரு சிவபாலு தங்கராசா 416 546 9413) அல்லது பேராசிரியர் இ. பாலசுந்தரம் (416 267 5255) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
அமைப்புக்குழவினர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.