'குவியம்' இணையத்தள ஆசிரியரும், எழுத்தாளருமான பொன் குலேந்திரன் அவர்களின் 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தில், அக்டோபர் 7ந்திகதி , 'ஓவியா பதிப்பக' வெளியீடாக வெளிவரவுள்ளது. கனடாவில் 'பீல் தமிழ் முதியோர் சங்கத்தி'ல் வெளியிடப்படுமெனவும், தொகுப்பின் கதைகள் பாரம்பர்யம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்று கூறுகின்றார் நூலாசிரியர் பொன் குலேந்திரன். தொகுப்பிலுள்ள ஒரு கதை ஆசிரியரின் துபாய் நாட்டில் அவரடைந்த அனுபவங்களைச் சார்ந்ததென்றும், நூலின் அட்டையினை நண்பர் புகழேந்தி அவர்கள் தயாரித்திருப்பதாகவும் மேலும் அவர் கூறுகின்றார். நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பொன் குலேந்திரன் அவர்களுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.