புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய 'எழுத்தாளர் விபரத்திரட்டு' தொகுப்பு நூல் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'காற்றுவெளி' இதழின் ஆசிரியரும், இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று, இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டுஆகிய இரு தொகுப்பு நூல்களின் தொகுப்பாசிரியரான எழுத்தாளர் முல்லை அமுதனே இத்தொகுப்பு நூலினைத் தொகுத்துள்ளவருமாவார்.
புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய முறையான , சரியான புரிதலுக்கு, அறிதலுக்கு இது போன்ற தொகுப்பு நூல்கள் முக்கிய ஆவணங்களாக விளங்கும் சிறப்பு மிக்கவை. இத்தொகுப்பு நூல்களைத் தனியொருவராகத் தொகுத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியிருக்கும் எழுத்தாளர் முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர்.
இத்தொகுப்பு நூல் மீள்பதிப்புகளாக வெளிவரவேண்டும். அவ்விதம் வெளிவரும்போது மேலும் மேலும் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்நூலினைப் பெற விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். விபரங்கள் வருமாறு:
ஓவியா பதிப்பகம்
17-16-5 ஏ, கே.கே.நகர்,
வத்தலக்குண்டு - 624 202
திண்டுக்கல் மாவட்டம்.
நன்றி: வதிலைப்பிரபா, ஓவியா பதிப்பகம்.