காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' - வள்ளுவராண்டு 2047
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.
நெறியாளர்: தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழுவினராக மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் (கனடா), மதிப்புக்குரிய மு புஸ்பராசன் (இங்கிலாந்து), மதிப்பிற்குரிய இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), மதிப்புக்குரிய அ. யேசுராசா (இலங்கை), மதிப்பிற்குரிய ஜோ டி குருஸ் (தமிழ்நாடு) ஆகியோர் பரிசீலனை செய்வர்.
0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
0- தலைப்பு: 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30.11.2015
முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்று ஆறுதல் பரிசுகள் - காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்
க. முகுந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.