நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.
டேவிட் ஐயாவின் வாழ்க்கை, அவரது அரசியல், சமூகப் பங்களிப்பு தொடர்பாக உள்ள பதிவுகள் , எழுத்துக்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை தொகுக்கும் பணியில் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். டேவிட் ஐயா பற்றி எழுதக் கூடியவர்கள் தமது பதிவுகளை இம்மாதம் (ஒக்டோபர்) இறுதிக்குள் அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.
ஏலவே வெளிவந்த குறிப்புகள், கட்டுரைகள் இருப்பின் அவற்றினை தொகுப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்கிறோம். புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், மற்றும் அவரின் கையெழுத்துப் பிரதிகள் இருப்பின் அவற்றின் பிரதிகளையும் எமக்கு அனுப்பித் தருமாறு கேட்கிறோம். டேவிட் ஐயா தொடர்பான நூல் தொகுப்பு பணிக்கு, அவர் தொடர்பான பல்வேறு பார்வைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்வில் கவிஞர் திருமாவளவனின் முழுக் கவிதைகளின் தொகுப்பான "சிறு புள் மனம்" செம்பதிப்புத் தொகுப்பும் வெளியிடப்பட உள்ளதுடன் திருமாவளவனின் படைப்புலகம் பற்றிய உரைகளும் கருத்துப் பகிர்வும் இடம் பெறவுள்ளது. திருமாவளவனின் கவிதைகள் ஆற்றுகை செய்யப்படவுமுள்ளன.
இந்த முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்பு மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு தொலைபேசி எண் (0044) 7817262980