தமிழ் ஸ்டுடியோ.காம்: இயக்குனர் ருத்ரைய்யா நினைவுக் கூட்டம்...
30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை.
நினைவை பகிர்ந்துக் கொள்பவர்கள்:
வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்), கோபண்ணா (காங்கிரஸ்) சந்திரசேகர், டாக்டர் காந்தராஜ், நக்கீரன் கோபால், கங்கையமரன், ராஜேஷ்,கே. ராஜேஷ்வர், ஞானசேகரன், அருண்மொழி, அரவிந்தன், ராசி அழகப்பன், ஞாநி ட்ராட்ஸ்கி மருது, வண்ணநிலவன், B.லெனின், D.I. அரவிந்தன் (தமிழ் ஹிந்து), கே.ஆர், வீ. சேகர், சீனு ராமசாமி, UTV தனஞ்செயன், அருள்மொழி, கே.ராஜன், RK செல்வமணி, ரவி சுப்ரமணியன்
நண்பர்களே, இயக்குனர் ருத்ரைய்யா இரண்டு திரைப்படங்கள்தான் எடுத்திருக்கிறார். ஆனால் இன்றளவும் ருத்ரைய்யா தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகவே இருக்கிறார். ருத்ரையாவின் நினைவுக் கூட்டத்திற்கு பெருந்திரளாக திரண்டு வாருங்கள். கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றத்தான் நமக்கு தெரியவில்லை. குறைந்தது நினைவுக் கூட்டத்திலாவது அவர்களை போற்ற முயற்சிப்போம். திரண்டு வாருங்கள்.
அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மூத்த முற்போக்கு எழுத்தாளர்களிரொருவரவரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முத்த உறுப்பினராக காவலூர் ராஜதுரை முக்கியமான ஒருவர். வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இவர் தீட்டிய சிறுகதைகள் சமூக முக்கியத்துவம் உடையவைகளாகும். யாழ்பாணத்தில் ஊர்காவற்துறையில் கரம்பன் என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளினூடாக முழு இலங்கை சார்ந்த புத்திஜீவியாக ஆளுமையாக திகழ்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இவர் தமக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் முற்போக்கு இலக்கியத்தின் செழுமைக்காக பயன்படுத்தியவர். இவரது கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் மலையக மக்களின் வாழ்வை பின்னணியாகக் கொண்டது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

அன்புடையீர்!! அருந்தமிழ்ப் பற்றுடையீர்!! வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதிமூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 18.10.2014 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்்களுடன் உறவுகளுடன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் 

Math Paper Press 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









