படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175) மண்டபத்தில் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில் நடைபெறவுள்ள 'சொல்ல மறந்த கதைகள்' நூல் தமிழ் நாடு மலைகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.
இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா மற்றும் ஜெர்மனியில் வெளியாகும் இதழ்கள் , இணைய இதழ்கள் ஆகியனவற்றில் பதிவான படைப்புகளின் தொகுப்பு சொல்ல மறந்த கதைகள். இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் அரசியலிலும் மூவீன மக்களிடத்திலும் ஏற்பட்ட மாற்றங்களையும் ஒரு ஊடகவியலாளனின் மனிதநேய - மனித உரிமைப் பார்வையில் இலக்கிய நயமுடன் பதிவுசெய்த புதிய தொகுப்பு நூல் சொல்ல மறந்த கதைகள். 1972 காலப்பகுதியில் படைப்பு இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறையில் பிரவேசித்த முருகபூபதியின் இருபதாவது நூல் சொல்ல மறந்த கதைகள். இவ்வெளியீட்டு அரங்கிற்கு அன்பர்களும் கலை - இலக்கிய ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. லெ. முருகபூபதி - தொலைபேசி: 04 166 25 766
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.