தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!
அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா - திரைப்படங்கள் திரையிடல்.
நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்)
இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400
திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம்.
அறிவிப்பு இரண்டு: படிமை - திரைப்பட பயிற்சி வகுப்பு - மாணவர் சேர்க்கை
முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.


24-02-2014 









நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி. பேசிய வெளி - சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.
கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









