[ஒரு பதிவுக்காக இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்பு பிரசுரமாகின்றது. 'பதிவுகளு'க்கு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்களை அறியத்தருபவர்கள் இறுதி நேரத்தில் அனுப்புவதைத் தவிர்க்கவும். - பதிவுகள் -]
26.1.2014 அன்று சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும் நூல்வெளியீடும் நடைபெறுகிறது. 26.1.2014 அன்று மாலை ஆறுமணியளவில், 100, விக்டோரியா சாலை, சிங்கப்பூர், தேசிய நூலகத்தில் ( ஐந்தாம் தளம்) எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் குறித்து ஒரு கருத்தரங்கும் அதைத் தொடர்ந்து அவருடைய இரண்டு நூல்களும் வெளியிடப்பட உள்ளன. முதல் நூல் , 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலுக்கான சிங்கப்பூரின் அமரர் மு.கு இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசு பெற்ற 'ஒரு கோடி டாலர்கள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பு.நூல் (சந்தியா பதிப்பகம்) அடுத்த நூல் 62 நவீனக் கவிதைகளை உள்ளடக்கிய ‘ மலைகளின் பறத்தல்’ என்ற அவருடைய கவிதைத்தொகுப்புநூல் (அகநாழிகை பதிப்பகம்) . . தேசிய கலைகள் மன்றம், கனடா இலக்கியத் தோட்டம் ஆகியஅமைப்புகள் வெளியிட்ட தொகுதி நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை அவருடைய இரண்டாவது சிறுகதை மற்றும் கவிதை நூல்கள் ஆகும். இக்கருத்தரங்கில் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள், எழுத்தாளர் மாதங்கியின் மரபுக்கவிதைகளைப் பற்றிப்பேசுவார்.
நூல்களைப் பற்றி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் அவர்களும் , தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா நாயுடு அவர்களும் உரையாற்றுவார்கள். திரு ஆண்டியப்பன் இரண்டு நூல்களையும் வெளியிட மூத்த எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தனும், முனைவர் சீதாலட்சுமியும் நூல்களைப் பெற்றுக்கொள்வார்கள். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக ஆறு மாணவர்கள் பங்கேற்கும் மாணவர் அரங்கு உள்ளது. மெக்ஃபெர்சன் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த இம்மானுவேல் ஜெயசிங் ஹேஸல், ரபியாத்துல் ஃபசாரியா, நசீமா பேகம், இம்மானுவேல் ஜெயசிங் டிவினா, தஹசீன், முகமது ஹனீப் முபீனா ஆகியோர் இதில் பங்குபெறுவார்கள்.
மாலை மணி 6.00 முதல் 8.00 மணிவரை உள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ஆறு மணிக்குச் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.