பேசாமொழி 11வது இதழ் வெளிவந்துவிட்டது...
நண்பர்களே பேசாமொழி (http://pesaamoli.com/index_content_11.html) 11வது இதழ் இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழ், இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நல்ல சினிமா பற்றிய எழுத்தாளர்களின் மௌனம் குறித்த மருதுவின் கட்டுரையும், சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கபே திரைப்படம் குறித்த யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், எழுத்தாளர்களும், சினிமாவும் என்கிற தியடோர் பாஸ்கரனின் கட்டுரையும், சிறுகதைகளில் இருந்து குறும்படமாக்கப்பட்ட படங்கள் குறித்த தினேஷின் கட்டுரையும், ஏழை படும் பாடு படம் குறித்த பிச்சைக்காரனின் கட்டுரையும், பூ திரைப்படம் பற்றிய ரிஷான் ஷெரிபின் கட்டுரையும், சாஹித்ய அகடெமி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கு பற்றிய குமரகுருபரனின் கட்டுரையும் முக்கியமானது. தவிர ஷாட் பை ஷாட் மொழிபெயர்ப்பும் இந்த மாதம் வெளிவந்துள்ளது. தமிழில் நாவலில் இருந்து திரைப்படமாக்கப்பட்ட படங்களின் பட்டியலும், to-live படம் குறித்த கட்டுரையும் கூடுதல் கவனத்திற்குரியது. பேசாமொழி மாத இதழ் முழுக்க முழுக்க சினிமாவிற்கானது. எவ்வித கட்டணமும் இன்றி, இணையத்தில் இலவசமாக பேசாமொழி இதழை படிக்கலாம். நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள பல கட்டுரைகள் படிக்க கிடைக்கும். நண்பர்கள் அவசியம் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். --- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்:
இங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலைக்கூடத்தின இயபக்குனர் நாட்டிய விஷாரத் ஜெயந்தி யோகராஜாவின் மகளும், மாணவியுமான செல்வி சஸ்கியா யோகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆவணிமாதம் 24ம் திகதி இந்தியாவில் சென்னை மியூசிக் அக்கடமியில் கலைமாமணி நரசிமமாச்சாரிää கலாஷேத்திரா அதிபர் ஜனார்த்தனன் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செல்வி சஸ்கியாவிற்கு ‘நாட்டிய ரூபினி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டமை சிறப்பாம்சமாகும். அரங்கேற்ற நிகழ்வின்போது ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் ‘ராஜேஸ்வரி நர்த்தனம்’ என்னும் பாடல்இறுவெட்டினை வேதம் புதிது மியூசிக் இயக்குநர் தேய்வேந்திரன், ‘கலைமாமணி ஷோபனா ரமேஷ், ‘கலைமாமணி’ லலா ஆறுமுகஐயா, ‘கலாரத்தினா’ உமா சங்கர்ää இந்திய ரயில்த் திணைக்கள கவன்சிலர் ஆர். பத்மநாபன், ஆண்டான் கோவில் சுந்தரராஜன் ஆகியோரினால் வெளியிடப்பட்டு ஜெயந்தி யோசராஜாவிற்கு ‘ராஜேஸ்வர நர்த்தகி’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. ராஜேஸ்வர நர்த்தனம் என்னும் இறுவெட்டு நாட்டிய மார்க்கம் அடங்கிய புதிய பாடல்களைக்கொண்டது. இதன் பாடல்வரி, இயக்கம் அனைத்தும் ஜெயந்தி யோகராஜாவினால் ஆக்கப்பட்டது. இவர் கடந்த வருடம் காலம் சென்ற தன் தயார் ராஜேஸ்வரி அன்ரனிரட்னம் அவர்களின் நினைவாக வெளியிட்டிருந்தார்.
நேற்று ஹரோ சிவிக் மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக் கழகத்தினரின் 'கண்ணாடி வார்ப்புக்கள்' நாடக நூல் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. சில நூல் அறிமுக விழாக்களுக்கு செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.
பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான,தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
பேராசிரியர் - ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசா இலண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை (28 - 09 - 2013) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஏற்பாட்டில் 28 -ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரபல எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணன் தலைமை வகித்தார். திருமதி வேலையா தமிழ்மொழி வாழ்த்தினையும் பக்திப் பாடல்களையும் பாடினார். திருமதி நிர்மலா விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் பேராசிரியரது பணிகளைக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சபா ஜெயராசா தம்பதிகளுக்குப் பொன்னாடை போர்த்து - மாலை அணிவித்து - நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இரா. உதயணன் பேராசிரியரின் பல்துறை ஆளுமைகள் குறித்து விரிவாகத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827 HIGH STREET, EPPING, VIC 3076 - Melway :- 182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’, ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.
"ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது ஜேர்மனிய நாசிப் படைகள் குண்டுவீசி ஐயாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்த சற்றூரான ‘குவர்னிகா’, குண்டுகளுக்கு இரையான எல்லாத் தேசங்களுக்குமே பொருந்துகின்ற குறியீடாகும். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு மிகப் பொருத்தமான முகப்புத் தலைப்பாக ‘குவர்னிகா’ என்ற தலைப்பைத் தாங்கி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு மலராக இந்த மலர் வெளிவந்திருப்பது ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்யும் இலக்கிய முயற்சியாக நோக்கத்தக்கதாகும்" என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை(6.10.2013) வால்த்தம்ஸ்ரோவில் நடைபெற்ற ‘குவர்னிகா’ மலர் வெளியீட்டின்போது தலைமையுரை ஆற்றுகையில் தெரிவித்திருந்தார்: "பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான ஆக்கங்களைத் தாங்கி எண்ணூறு பக்கங்களில் மிகப் பாரிய தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘குவர்னிகா’ ஷோபாசக்தி, கருணாகரன, தமயந்தி போன்றோரின் மிகப்பெரும் உழைப்பில் உருவாகி உள்ளது. யுத்த மறுப்பையும், ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நிகழ்வுகளையும், சாதிய எதிர்ப்பையும், பெண்விடுதலையையும், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் பேசும் பெரும் தொகுப்பாக ‘குவர்னிகா’ மலர் அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் புகலிட நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புக்களின்போது வெளியான சுகனின் ‘இருள்வெளி’, கலைச் செல்வனின் ‘இனியும் சூல்கொள்’ ஆகிய மலர்களை அடுத்து மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ள ‘குவர்னிகா’ என்ற இந்த மலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் மகுடமாக அமைகிறது" என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
மனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல் , இவ்வருடம் ஒக்டோபர் மாதம் பதின்மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மதியம் 1:00 மணி,மாலை 6:00 மணி என இரண்டு காட்சிகளாக நடைபெறவுள்ளது. இந்த அரங்காடலில்

அக்டோபர் 6, 2013 - சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த ரவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘முரண்படுதலுக்கான காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை’ என்ற கருத்தை முன்னிருத்தி தமிழ்நாட்டிலிருந்து இந்த (2013) ஆண்டு முதல் வெளியாகும் தளம் கலை, இலக்கிய காலாண்டிதழின்; ஏப்ரில், மே, ஜூன் இதழ் சமீபத்தில் கிடைத்தது. நாடகச்சிறப்பிதழாக வந்துள்ள இவ்விதழ் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆக்கத்தையும் பதிவுசெய்து அன்னாரின் நூற்றாண்டு காலத்தையும் மறக்காமல் நினைவுபடுத்தியுள்ளது. தளம் இதழை உலகெங்கும் வாழும் கலை, இலக்கிய, நாடக, திரைப்படச்சுவைஞர்கள் படிக்கத்தக்கதாக தற்பொழுது இணையத்திலும் பார்க்கமுடிகிறது. தளம் மூன்றாவது இதழும் வெளியாகியுள்ளது.
சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவை நிறைந்த நிகழ்வாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களையும் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார்.
கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









