பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான,தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
தமிழ் மக்களின் மேல் அக்கறை கொண்ட சிலருக்கு கூட, தற்சமயம் இலங்கையில் இனவழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதில் ஐயப்பாடு உள்ள நிலை உணரப்பட்டது, தமிழர் அல்லாதோர் மனதிலுள்ள எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்காவிட்டிருந்தாலும் வரும் காலங்களில் மேலும் பல ஆய்வுகள், வெளியீடுகள், தரவுத் தொகுப்புகல், மற்றும் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்கள் போன்றனவை மூலம் இன்வழிப்பு நடைபெறுவதனை தமிலரல்லாதவர்கள் ஏற்றுக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு முன்நோக்கிய நகர்வாய் அமையப் பெற்றதென்ற கருத்து பங்குபற்றிய பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
working together for peace with justice and dignity