பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் 'பிரஞ்சுப் புரட்சி' (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!
பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் 'பிரஞ்சுப் புரட்சி' (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!

பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் 'பிரஞ்சுப் புரட்சி' (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!

தமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, இந்திய அளவிலும், உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில், உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும்
பெரிய சிவன் கோவில் (1148 Bellamy Road)
பிரதம விருந்தினர்: பேராசிரியர். செல்வா கனகநாயகம்
காலம்: ஞாயிறு ஏப்ரல் 28, 2013 மாலை 5.00 மணி - 9.00 மணி வரை
2012 ஜனவரியில் செயற்பட ஆரம்பித்த எழுநா ஊடக நிறுவனம், 2012 / 2013ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான செயற்பாடுகளைப் பூர்த்திசெய்து 2013 / 2014ஆம் ஆண்டு பருவகாலச் செயற்பாடுகளுக்குள் காலடி வைக்கின்றது. எழுநா செயற்பட விரும்பும் வெளிகளில், எழுநாவின் நண்பர்கள் வட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகளே கடந்த காலத்தில் வெளியீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் சமூகங்களின் பல்வகைமையை உறுதிசெய்யுமுகமாக பிரதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, எழுநா வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது, 2013 / 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில், எழுநா வெளியீடுகளுக்கான கோரலை பகிரங்கமாக முன்வைக்கின்றது. இளைய படைப்பாளிகள், அறிமுகமாகியிருக்காத எழுத்தாளர்களின் வெளியீடுகளை எழுநா ஊக்குவிக்க விரும்புகின்ற அதே நேரம், வெளியீட்டு வசதிகளற்ற / வெளியீட்டு வாய்ப்புக்கள் குறைந்த தரமான பிரதிகள் சார்ந்தும் அதிக கவனம் கொள்கின்றது.
1951 -ம் ஆண்டு ''வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 - ம் ஆண்டு ''ஈழநாடு" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் இவர் செய்வதை எல்லோரும் பாராட்டுவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர். ''ஈழநாடு" பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ''முரசொலி" பத்திரிகையிலும் பணிபுரிந்தார்.சிறுகதைகள் - குட்டிக்கதைகள் பல எழுதியவர். நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகிப் பாராட்டுப் பெற்றது. யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள்வரை அன்பாகப் பழகி இலக்கிய உரையாடல் செய்வதில் மகிழ்ச்சியடைந்தவர். போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து தமிழ்நாடு - திருச்சி நகரில் மனைவியோடு அமைதியாக வாழ்ந்துவந்தார். பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தார். 2010 -ம் ஆண்டு அக்டோபர் 10- ம் திகதி திருச்சி நகரில் இவரது அபிமானிகளால் இவரின் ''முத்துவிழா" சிறப்புறக் கொண்டாடப்பட்டது. ''இனிய நந்தவனம்" சஞ்சிகை முத்துவிழா மலர் வெளியிட்டுக் கௌரவித்தது. யான் கடந்த மே மாதம் (2012) திருச்சி சென்று ஒரு நாள் இவரோடு தங்கி பலஆண்டுகள் நாம் சந்தித்துப்பேச முடியாமல்போன அரசியல் - இலக்கிய விடயங்கள் - சர்ச்சைகள் குறித்து மிகவும் சுவராசியமாகப் பேசிக்கொண்டேன். இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..! அவரது மறைவை நினைக்கையில் நெஞ்சு கனக்கிறது..! அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

40ஆவது இலக்கியசந்திப்பு- லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013: மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும். நன்றி! - 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் (லண்டன்)

Still Counting the Dead நூலாசிரியர் ஃபிரான்சிஸ் ஹாரிசனுடனான சந்திப்பு.
"நான் தமிழ்நாட்டில் இருந்த காலப் பகுதியில்தான் இராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை ஈழத் தமிழர்கள் செய்தார்கள் என்பதை ஏற்க மறுக்கிறேன். திரு பழ. நெடுமாறன் கூறுவதைப் போல இந்தக் கொலையைச் செய்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டன. இராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப் பட்ட விதமும் தண்டனை வழங்கப்பட்ட விதமும் பல அய்யங்களை எழுப்புகின்றன. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். எஞ்சிய 13 பேர் ஈழத்தமிழர்கள். சரி சமமான எண்ணிக்கை என்பது தற்செயலான செயல் அல்ல. ஆழமான உள்நோக்குடன் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ் தேசிய உணர்வை சிதைப்பதற்காக இந்த சதி வகுக்கப்பட்டு சிபிஅய் என்ற புலனாய்வு அமைப்பு தனது புலன் விசாரணையை நடாத்தியது என நூலாசிரியர் திருச்சி வேலுசாமி சொல்லுகிறார்" என இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூல் பற்றி ஆய்வுரை ஆற்றிய முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் குறிப்பிட்டார்.
கணையாழி விருது விழா அழைப்பிதழ்
சங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும், சிற்றுண்டிச் சாலையிலும் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் கலாசார விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. பெண்களுக்கான கோலப்போட்டி, விளக்கேற்றுதல், பூக்கட்டுதல்,சொல் விளையாட்டு இன்னும் பல போட்டிகளும் ஆண்களுக்கான சட்டி உடைத்தல்,மட்டை கட்டுதல், தோரணம் பின்னுதல்,இசை நாற்காலி போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பள்ளி ஆசிரியர்களும் சிறுவர்களும் கலந்து கொள்ளும் வெற்றியாளர்களுக்குக் கவர்ச்சியானப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இப்போட்டி விளையாட்டு நிகழ்வில்,சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர். போட்டி சம்பந்தமாக ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
திரு.மு.குணாளன் -016 3100011 திரு.ச.நாரயணன் -013 2758142
திரு.சு.சரவணன் -010 2194055 திரு. மு.இளங்கோ -012 3175417
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வந்தவாசி, .பிப்.04. - தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில் பிப்ரவரி 2,3 ஆகிய இரு நாட்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.வெ.அன்புபாரதி சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் பரிசினை பெற்றிருக்கிறார். இவர் அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா ஆகியோரின் இளைய மகளாவார்.செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், சென்ற வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டவர். பள்ளி அளவிலும், மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் அன்புபாரதியிடம் வழங்கினார்.விழாவில், அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக் கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புடையீர் வணக்கம், மலேசியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடார மண்ணில் மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள் எனும் நூல் மலேசிய இலக்கிய வெளியில் முதன் முதலாக அரங்கேற்றம் காண்கின்றது. அத்துடன் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுடன் சிறுகதைப் பயிலரங்கம் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். நாள்: 23.02.2013; நேரம்: காலை மணி 9.00 - மாலை மணி 5.30; இடம்: சிந்தா சாயாங் ரிசோர்ட் . மேலதிக விபரங்கள் ...உள்ளே

ராஜீவ் படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் எதிர்வரும் பெப்ருவரி 16, 2013 அன்று மாலை 2.30 மணிக்கு 'ஸ்காப்ரபரோ சிவிக் சென்டர்'இல் நடைபெறவுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழக ஆதரவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:
இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

நாள்: 8, 9, 10, 11, 12 பிப்ரவரி - 2013
இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி.
நேரம்: காலை 10 மணி முதல்.

9 பெப்ருவரி 2013: 'காலம்' சஞ்சிகை (கனடா) 40வது இதழ் அறிமுகமும், கலந்துரையாடலும்!
இடம்: Trinity Centre, East Avenue, Eastham, London

2010/2011ஆம் ஆண்டுகளுக்கான சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும், திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்துடன் இணைந்து, தமிழவேள் கோ. சாரங்கபாணி சார்பாக ஆண்டுதோறும் இந்த் வழங்கினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள். விருது பெற்றவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.
எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில், தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம், மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்: பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்' தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்.....இன்னும் இன்னமுமாக...
கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம் பெற்றுள்ளது . 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ப்ராஜெக்ட்ல் ஒவ்வொரு மாதமும் புகழ்பெற்ற சிங்கப்பூர் கவிஞரும் அவரின் கவிதையும் சப்ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட் தொகுப்பில் இடம் பெறுவதுடன் , இணையப் பக்கத்திலும் வெளியிடப்படும். அது மட்டுமன்றி அழகிய ஓவியத்துடன் வண்ண போஸ்ட் கார்டுகளாக ஆர்மினியன் சாலையில் அமைந்திருக்கும் சப் ஸ்டேஷன் அலுவலகத்திலும், சிங்கப்பூரின் பிரபல புத்தகக் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதுவரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மூன்று தமிழ் கவிதைகளில் கவிஞர் நெப்போலியனின் கவிதையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டும் சிங்கப்பூரின் பிரபல நவீன எழுத்தாளரும் படைப்பாளருமான இளங்கோவன் மற்றும் தமிழ்முரசு ஞாயிறு பதிப்பின் ஆசிரியரும் சிங்கையின் முற்போக்கு கவிஞருமான லதா அவர்களுடையது.
"ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது." வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் திருப்பலியுடன் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சன. 20ம்தேதி 2013 அன்று குழுமியபோது மேற் குறிப்பிட்ட வாசகங்கள் சாலப் பொருந்துவதாக இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறோம். ஆனால் தமிழும் செழுமையான நமது மரபுகளும் பண்பாடும் நாங்கள் அமெரிக்காவிலிருந்தாலும் நாங்கள் யார் என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. நமது தமிழ் பாரம்பரியத்தையும் கத்தோலிக்கர் என்ற நம்பிக்கையையும் பொங்கல் திருப்பலியோடு கொண்டாட ஒரே கடவுளின் தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் சேர்ந்து வந்தோம். எங்களின் ஆன்ம வழிகாட்டியும் தலைவருமாக உள்ள அருட்திரு. பெஞ்சமின் சின்னப்பன் எங்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நூலகர் என். செல்வராஜா அவர்களுடனான சந்திப்பு 20.01.2013 ஞாயிறு காலை 10.00 மணிக்கு யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. உயில் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தொடக்கவுரையை ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.தனபாலசிங்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலகர் என். செல்வராஜா உரை நிகழ்த்தினார். தனது உரையில் நூல்தேட்டம் தொகுதிகள் பற்றியும், ஆவணப்படுத்தலில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் சுமைகள் பற்றியும், இவை பற்றி ஈழத்துப் படைப்புலகமோ நூலகங்களே பெரியளவில் கரிசனை கொள்ளாமல் இருப்பதன் துர்ப்பாக்கிய நிலை பற்றியும், தனது அனுபவங்களினூடாக எடுத்துரைத்தார். நிகழ்வுக்கு வருகை தந்த எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது.
(கடந்த தை முதல் நாளன்று (சனவரி 14) தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவில் திரு கந்தர் சிவநாதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். திரு கந்தர் சிவநாதன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கணிதம் அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும் அமெரிக்காவிலுள்ள ஒறிக்கன் பல்கலைக் கழகத்தில் முதுகலை (சிறப்பு) பட்டத்தையும் பெற்றவர். இவர் தாயகத்தில் ஆசிரியர் ஆகவும், கணித விரிவுரையாளர் ஆகவும் யாழ் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆகவும் இணை வட்டார கல்விப்பணிப்பாளர் ஆகவும் பணியாற்றியவர். இன்றைய உலகின் காலங்காட்டி மற்றும் அதிசய வானில் ஒரு பஞ்சாங்க உண்மை விளக்கம் என்ற இரண்டு அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர் தாயக மக்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப தன்னால் ஆன பங்களிப்பை நல்கி வருகிற கொடையாளர். தமிழின உணர்வாளர். பொங்கல் புத்தாண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

நந்தனம் YMCA மைதானத்தில் [அரசுக் கல்லூரி அருகில்] 11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 304_ல் புதுப்புனல் தனது வெளியீடுகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளது. தவறாமல் வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.