மலேசியா: மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் படைக்கும் பொங்கல் கலாசார விளையாட்டுப் போட்டி
சங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும், சிற்றுண்டிச் சாலையிலும் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் கலாசார விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. பெண்களுக்கான கோலப்போட்டி, விளக்கேற்றுதல், பூக்கட்டுதல்,சொல் விளையாட்டு இன்னும் பல போட்டிகளும் ஆண்களுக்கான சட்டி உடைத்தல்,மட்டை கட்டுதல், தோரணம் பின்னுதல்,இசை நாற்காலி போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பள்ளி ஆசிரியர்களும் சிறுவர்களும் கலந்து கொள்ளும் வெற்றியாளர்களுக்குக் கவர்ச்சியானப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இப்போட்டி விளையாட்டு நிகழ்வில்,சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர். போட்டி சம்பந்தமாக ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
திரு.மு.குணாளன் -016 3100011 திரு.ச.நாரயணன் -013 2758142
திரு.சு.சரவணன் -010 2194055 திரு. மு.இளங்கோ -012 3175417
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வந்தவாசி, .பிப்.04. - தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில் பிப்ரவரி 2,3 ஆகிய இரு நாட்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.வெ.அன்புபாரதி சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் பரிசினை பெற்றிருக்கிறார். இவர் அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா ஆகியோரின் இளைய மகளாவார்.செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், சென்ற வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டவர். பள்ளி அளவிலும், மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் அன்புபாரதியிடம் வழங்கினார்.விழாவில், அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக் கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.


எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில், தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம், மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்: பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்' தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்.....இன்னும் இன்னமுமாக...
கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம் பெற்றுள்ளது . 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ப்ராஜெக்ட்ல் ஒவ்வொரு மாதமும் புகழ்பெற்ற சிங்கப்பூர் கவிஞரும் அவரின் கவிதையும் சப்ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட் தொகுப்பில் இடம் பெறுவதுடன் , இணையப் பக்கத்திலும் வெளியிடப்படும். அது மட்டுமன்றி அழகிய ஓவியத்துடன் வண்ண போஸ்ட் கார்டுகளாக ஆர்மினியன் சாலையில் அமைந்திருக்கும் சப் ஸ்டேஷன் அலுவலகத்திலும், சிங்கப்பூரின் பிரபல புத்தகக் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதுவரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மூன்று தமிழ் கவிதைகளில் கவிஞர் நெப்போலியனின் கவிதையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டும் சிங்கப்பூரின் பிரபல நவீன எழுத்தாளரும் படைப்பாளருமான இளங்கோவன் மற்றும் தமிழ்முரசு ஞாயிறு பதிப்பின் ஆசிரியரும் சிங்கையின் முற்போக்கு கவிஞருமான லதா அவர்களுடையது.
"ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது." வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் திருப்பலியுடன் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சன. 20ம்தேதி 2013 அன்று குழுமியபோது மேற் குறிப்பிட்ட வாசகங்கள் சாலப் பொருந்துவதாக இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் இருக்கிறோம். ஆனால் தமிழும் செழுமையான நமது மரபுகளும் பண்பாடும் நாங்கள் அமெரிக்காவிலிருந்தாலும் நாங்கள் யார் என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. நமது தமிழ் பாரம்பரியத்தையும் கத்தோலிக்கர் என்ற நம்பிக்கையையும் பொங்கல் திருப்பலியோடு கொண்டாட ஒரே கடவுளின் தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் சேர்ந்து வந்தோம். எங்களின் ஆன்ம வழிகாட்டியும் தலைவருமாக உள்ள அருட்திரு. பெஞ்சமின் சின்னப்பன் எங்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.
(கடந்த தை முதல் நாளன்று (சனவரி 14) தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவில் திரு கந்தர் சிவநாதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். திரு கந்தர் சிவநாதன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கணிதம் அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும் அமெரிக்காவிலுள்ள ஒறிக்கன் பல்கலைக் கழகத்தில் முதுகலை (சிறப்பு) பட்டத்தையும் பெற்றவர். இவர் தாயகத்தில் ஆசிரியர் ஆகவும், கணித விரிவுரையாளர் ஆகவும் யாழ் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆகவும் இணை வட்டார கல்விப்பணிப்பாளர் ஆகவும் பணியாற்றியவர். இன்றைய உலகின் காலங்காட்டி மற்றும் அதிசய வானில் ஒரு பஞ்சாங்க உண்மை விளக்கம் என்ற இரண்டு அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர் தாயக மக்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப தன்னால் ஆன பங்களிப்பை நல்கி வருகிற கொடையாளர். தமிழின உணர்வாளர். பொங்கல் புத்தாண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்று புத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன.

சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த நோக்கோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்குழுக்கூட்ட அறையில் நடந்தது. டொக்ரர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கினை வீரகேசரி வாரப்பதிப்பின் முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம, கொடகே பதிப்பக அதிபர்சுமணஸ்ரீ கொடகே, டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் பணிப்பாளர் ‘ பாரிஸ் ஈழநாடு’குகநாதன் உள்ளிட்ட பலர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து எழுத்தாளர் திக்குவல்லை கமால் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். இதனையடுத்து, நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்களமொழிபெயர்ப்பு சமணல வௌ பற்றிய அறிமுகத்தை ஊடகவியலாளர் கலாநிதி ஹேமசிறி குருப்பு நிகழ்த்தினார். இந்த நாவலை பிரபல மொழிபெயர்ப்பாளர் மடுளுகிரிய விஜேரத்ன மொழிபெயர்த்திருந்தார். அவரே இதனை பதிப்பித்து வெளியிட்டிருந்தார். ஏற்கனவே இந்த நாவல் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகி பரந்த அறிமுகத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி ஆகும். ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









