அன்பு தோழர்களே, 'தமிழர்களுக்கான சர்வதேசப் பிரச்சாரம்' (Global Campaign for Tamils) சார்பாக , ஐ.நா.ம.உ.க வாக்கெடுப்பை முன்னிட்டு பல மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்திருக்கிறேன். இவற்றை உங்களுடைய வெளி மாநில, வெளிநாட்டு நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும். இது இன்றோடு முடிகிற விவகாரமன்று. இன்று தொடங்கி இந்த பிரச்சாரத்தை இலங்கையில் காமன்வெல் மாநாடு நடைபெறவுள்ள நவம்பர் வரையில், அல்லது அடுத்த ஆண்டு வாக்கெடுப்பு காலம் வரை செய்யவேண்டும். உலகின் கவனத்துக்கு ஈழத் தமிழர் பிரச்சனையைக் கொண்டு செல்ல அனைத்து முக்கிய ஐரோப்பிய, ஆசிய, இந்திய மொழிகளிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். அதன் தொடக்கமே இந்த பிரச்சார ஃபேஸ்புக் கவர்கள். இன்று தொடர்ச்சியாக அவற்றை நான் ஃபேஸ்புக்கில் ஏற்றிவருகிறேன். பின்வரும் மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் இன்று தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளன:
English
العربية/عربي/عربى Arabic
বাংলা Bengali
中文 Chinese
čeština Czech
Nederlands Dutch
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
हिन्दी Hindi
Italiano Italian
日本語 Japanese
Bahasa Melayu Malay
മലയാളം Malayalam
मराठी Marathi
नेपाली Nepali
Русский Russian
Español Spanish
தமிழ் Tamil
اُردُو Urdu
இந்த வாசங்கள் டெக்ஸ்ட் கோப்புகளாகவும் ஃபோட்டோஷாப் கோப்புகளாகவும் தனியாகவும் உள்ளன. சுவரொட்டிகளாக, பிளக்கார்டுகளாக பயன்படுத்தவிரும்பினால் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். மேலும் பல மொழிகள் தொடரும். இந்த உலகளாவிய பிரச்சாரம் தொடர்பாக எனது நண்பர் ஒருவர் ஒரு வெப்சைட்டை உருவாக்கி வருகிறார். ஓரிரு நாட்களில் அது வலையேறும். உங்கள் ஆதரவைத் தாருங்கள். நேரம் எடுத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு இந்த ஃபேஸ்புக் கவர்களை பிரபலப்படுத்துங்கள்.
செ.ச.செந்தில்நாதன்
தமிழர்களுக்கான சர்வதேசப் பிரச்சாரம் (Global Campaign for Tamils) சார்பாக
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.