காலம்: 01ஏப்ரல் 2013 (வங்கி விடுமுறை தினம்) | காலை 10.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்: Trinity Community Centre, East Avenue, Eastham, London E12 6SG, (Nearest Underground: Eastham)
புகலிடத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எம்மவர்களுக்கு மலிவு விலையில் அண்மைக்கால வெளியீடுகளான ஈழத்துத் தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் முழுநாள் நிகழ்வு. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது அண்மைக்கால வெளியீடுகளையும் அதற்கான வாசகர்களையும் நேரடியாக ஒரு தளத்தில் கொண்டுசேர்க்கும் நிகழ்வு.
சிறுவர் நூல்கள், வளர்ந்தோர்களுக்கான கலை, இலக்கிய அறிவியல் நூல்கள்ää தீவிர வாசகர்களுக்கான துறைசார் ஆய்வுநூல்கள்ää 500க்கும் அதிகமான தலைப்புகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் 2009-2013 காலப்பகுதியில் தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி வெளியாகிய நூல்களும் காட்சிப்படுத்தப்படும். தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்ட முன்வந்துள்ள ஆசிரியர்களையும் பெற்றோர்களையும்ää படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் அன்புடன் அழைக்கின்றோம். ஈழத்துத் தமிழ்ப் பதிப்பு-விற்பனைச் சூழலில் புதியதொரு அனுபவத்தை பகிர்ந்துகொள்வோம். வங்கி விடுமுறை தினமான ஏப்ரல் 1ம் திகதி – உங்கள் நாட்குறிப்பில் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாகட்டும்.
தொடர்புகள்: என்.செல்வராஜா 0781 740 2704
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.