லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டன் மேடைகள் கடந்த சில மாதங்களாக பரதநாட்டியம், பாட்டு, மிதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று களை கட்டி கலைப் பூரிப்புடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோரதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் லண்டன் வெயர் வில்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ‘புஷ்பாஞ்சலி, விநாயகர் ஸ்துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், கணபதி தலாட்டு, கீர்த்தனம், சிவ தாண்டவம், தில்லானா என்ற ஒழுங்கில் விறுவிறுப்பு, கவர்ச்சி, கர்ச்சிதம் நிறைந்த நடன உருப்படிகளோடு பார்வையாளர்களை கட்டி வைத்த பெருமை ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோதரிகளை பெருமையாக நோக்க வைக்கிறது என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த London Oriental Examination Board இன் Director கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் தெரிவித்திருந்தார். திறமையான பக்கவாத்தியக் கஞைர்களாhல் அரங்கு சிறப்படைந்திருந்ததையும் மேலும் அவர் பாராட்டியிருந்தார்.

தனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசு: தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. 2007 - 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2013 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது. கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) மாலை 5.30 மணி) பரிசு வழங்கப்படும்.
நூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்களை வலைப்பதிவு நண்பர்களுக்காக இணைக்கிறேன்.
தோழமையுடன், "எதுவரை" இணைய இதழ்-06 பதிவேற்றப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! இதழ் 07க்கு படைப்புகள்,கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் டிசம்பர் 06ம் திகதிக்கு முன் எமக்கு கிடைக்கக் கூடியதாக 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இவ்வருடத்திற்கான சிறுகதைப் பட்டறையின் முதலாவது நிகழ்வு ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் சென்ற வெள்ளிக்கிழமை 09-11-2012 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப உரையில் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சின்னையா சிவநேசன் அவர்கள் அடுத்த ஆண்டு எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் முகமாக மலர் ஒன்றும் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், அதற்குரிய ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நம்மவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வெகுவாக அருகி வருவதாகவும், இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தகைய பட்டறைகளைத் தொடர்ந்தும் நடத்த இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
வணக்கம், இன்று (16-11-2012) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடுசெய்திருந்த ஜீவநதி கனடா சிறப்பிதழ் குறித்த கலந்துரையாடலின்போது, பல ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஜீவநதியின் தொடர்ச்சியான வருகைக்கு உதவப் பலரும் முன்வந்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும். குறிப்பாக, வருடாந்த சந்தாவான 50 டொலர் ஒரு பெரியதொகை என்பதால், ஆறுமாத சந்தாவான 25 டொலரைக் கொடுப்பது பலருக்கும் வசதியாக இருக்கும் என கவிஞர் திருமாவளவன் அவர்கள் ஆலோசனையை ஒன்றை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பலரும் உடனடியாக டொலர் 25 வழங்கி இன்றே தம்மை ஜீவநதியின் சந்தாதாரராக இணைத்துக்கொண்டனர். இந்த ஏற்பாடு உங்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் வசதியாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு ஆறுமாத சந்தாவைச் செலுத்தி, சந்தாதாரராக நீங்களோ உங்கள் நண்பர்களோ சேர விரும்பினால் அதற்குரிய பணத்தையும் உங்கள் தபால் முகவரியையும் என்னிடம் சேர்ப்பித்தால் எல்லோரதும் பணத்தையும் திரட்டி அனுப்பிவைத்து, மாதாமாதம் தபாலில் ஜீவநதி உங்கள் முகவரிக்கு வந்துசேர வழிசெய்ய முடியும். உங்கள் சம்மதத்தை இந்த மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எனது தொலைபேசி வழியாகவோ (416 - 627 6583) என்னோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள். அது, ஈழத்திலிருந்து தமிழ் மீதும், தமிழிலக்கியத்தின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக, இந்தத் தீக்குளிப்பு முயற்சியில் துணிந்து ஈடுபாடுள்ள அந்த இளம் ஆர்வலர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும்.
யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அம்பிகைபாகன் பற்றி யாழ். கல்வியல்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் எழுதிய 'அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்' என்னும் நூல் வெளியீடும், அவரது துணைவியார் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகனின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் அக்டோபர் 19, 2012 அன்று யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் மகேந்திரம் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நூலை வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதியை அம்பிகைபாகனின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் மற்றும் நூலாசிரியர் முருகேசு கௌரிகாந்தன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மேற்படி நூலில் திரு.அம்பிகைபாகன் அவர்கள் ஆற்றிய எழுத்துலக, சமய, பதிப்பு , கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் மற்றும் அவரது வரலாறு பற்றிய விபரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது ஆளுமையினை நன்கு புரிந்துகொண்ட அறிஞர்கள் பலரின் அவர் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் பின் இணைப்பாகத் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் பற்றிய குறிப்புகளும், அம்பிகைபாகன் அவர்களது வாழ்வினை வெளிப்படுத்தும் நிழற்படங்களும், வாழ்த்துரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
காலம்: 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி , நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை
நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ‘ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல்’ என்ற செயற்பாடும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 01.10.2012 அன்று சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவுசெய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரன் அவர்களுடன், முனைவர் ஜெ. அரங்கராஜ், சுன்னாகம் நூலகர் கே. சௌந்தரராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர், இதுபோன்ற தொடர் செயற்பாட்டில் ஈடுபட நூலகம் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்புடையவர்கள் இம்முயற்சிக்கு உதவவேண்டும் என்பதும் நூலகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி வீ.கே.டி. பாலனைப் பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர். ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.
கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து 3 ஹைக்கூ கவிதைகளை (இயற்கை சார்ந்தது) அனுப்பி வையுங்கள். முழு முகவரி, கைப்பேசி எண்ணோடு, கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் : நவம்பர் 30, 2012.
அமெரிக்காவிலுள்ள என்எக்ஸ்பீசெமிகன்டக்டர் நிறுவனத்தில் முதன்மைப் பொறிஞராகப் பணி புரியும் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி 'அடிப்படை ரேடியோ தொடர்பாடல்' (Fundamentals of Radio Communications) என்னுமொரு தமிழ் நூலொன்றினை இலத்திரனியற் துறையில் எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்தில் அடையாளம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்மிக்க இந்நூலினை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
கம்பன் உறவுகளே வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை L'espace Associatif des Doucettes, rue du Tiers, 95140 Garges les Gonesse என்ற இடத்தில் கொண்டாடுகிறது. உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 01.11.2012 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. எனது இலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் என்னை எழுத ஊக்குவித்து வரும் உங்களிடம் இத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். என்றும் அன்புடன், - எம்.ரிஷான் ஷெரீப் - 
கடந்த வாரம் 12.10.2012 வெள்ளியன்று உயிரையும், தங்களது இழப்புகளையும் பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ்செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில் புரிந்தவர்களைக் கௌரவிக்கும் 40 ஆவது வருட தேசிய நிகழ்வு கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ "றிடோ" வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. விழாவில் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டவர்களில் காலம் சென்ற "இளம் வீரன்" பிருந்தன் முதன்மையாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுறோ (கனடா) நகரில் குளிர் நீர் நிறைந்திருந்த ஒரு குளத்தில் மூழ்கிய பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றுவதற்காகக் குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். பிருந்தனது தந்தையான நடராஜா முரளிதரனும் , தாயாரான சத்தியசிறியும் (றஞ்சி) நிகழ்வில் பங்குபற்றி பிருந்தன் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், மலையாள எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் தமிழ் பிரிவிற்கான விருது சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் மினிமேன்னுக்கும். அவ்விழாவில் முன்னாள் கேரளா கலாச்சார அமைச்சர் பேபி, மலையாளத் திரைப்பட நடிகை கிருபா, திரைப்பட நடிகர் மேகநாதன், பாலக்காடு எம்.பி. ராஜேஸ், கோவை எம்.பி. நடராஜன், கேரள சாகித்ய அகாதமி செயலாளர் கவிஞர் ராமுன்னி, விஜயகுமார் குனிச்சேரி, ஸ்டான்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்களும் வாசகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









