தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்" - பாரதியார் -
TCWA, 56 Littles Road, Scarborough, ON, M1B 5C5
416-281-1165
தனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசு: தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. 2007 - 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2013 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது. கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) மாலை 5.30 மணி) பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவம்
(1) குழந்தையின் பெயர்---------------------------
(2) பிறந்த நாள்-------------------------------
(3) பிறந்த இடம்--------------------------
(4) தாயாரின் பெயர்-----------------------------------------------
(5) தந்தையாரின் பெயர்----------------------------------
(6) முகவரி---------------------------------------------------------------
(7) தொ.பே. இல.--------------------------------------------
குழந்தையின் பெயரை உறுதிப் படுத்தும் பிறப்புச் சான்றிதழ் (படி) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள தரவுகள் முற்றிலும் உண்மையானவை என இத்தால் உறுதிப் படுத்துகிறோம்.
தாயார் கையெழுத்து---------------------------------------------
தந்தையார் கையெழுத்து.--------------------------------------
அனுப்ப வேண்டிய முகவரி:
Secretary, TCWA, 56 Littles Road Scarborough, Ontario. M1B 5C5
athangav@இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.