காலம்: 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி , நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை
இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் “இரங்கம்மாள் விருது“ பெற்ற “தமிழ் மகனின் படைப்புலகம்“ : ஆய்வரங்கம்
பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல்,பொன் இளவேனில், யாழி, தியாகு. அனைவரும் வருக! வருக! வருக!
தமிழ் மகனின் நூல்கள்:
கவிதை நூல்கள்: பூமிக்குப் புரிய வைப்போம், ஆறறிவு மரங்கள். சிறுகதை நூல்கள்: எட்டாயிரம் தலைமுறை., மீன்மலர், சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் , வெள்ளை நிறத்தில் ஒரு காதல், சொல்லித் தந்த பூமி, ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம், மிஸ் மாயா. நாவல்கள்: மானுடப் பண்ணை, வெட்டுப் புலி (இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் திராவிட மனச் சூழலை விவரிக்கும் நாவல். இரங்கம்மாள் விருது பெற்றது ), ஆண்பால் பெண்பால்(சென்றாண்டின்சிறந்த நாவல் பரிசு 3 பெற்றது ) . கட்டுரை நூல்கள்: விமானங்களை விழுங்கும் மர்மக்கடல், வாழ்க்கைத் தொடர் கட்டுரைகள்: வாக்குமூலம் (தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் பற்றியது). சங்கர் முதல் ஷங்கர் வரை (தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் பற்றியது). திரையுலகத் தொடர் கட்டுரைகள்: தில்லானா தில்லானா (நடிகை மீனா கட்டுரைத் தொடர்). செல்லுலாய்ட் சித்திரங்கள் (நேரில் சந்தித்த திரைப்படக் கலைஞர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்). மொழி பெயர்க்கப்பட்டவை: இவரது சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.