எதுவரை: செப்டம்பர் மாத நிகழ்வு!
இலங்கை,கனடா நாடுகளின் கல்வித்துறையும் ,எனது அனுபவங்களும்...
-பொ,கனகசபாபதி (முன்னாள் அதிபர்-மஹாஜனக் கல்லூரி; பல்கலாசார ஆலோசகர்- கனடா) ; வழிப்படுத்துகை- நா.சபேசன்
வடமாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ,நிலவரமும்...
-முஹம்மட் எஸ்-ஆர்-நிஸ்தார் (சட்ட வளவாளர்); வழிப்படுத்துகை- ஜெயக்குமார் மகாதேவன்
காலம்-15 செப்டம்பர் 2012 சனி - மாலை 4.00 மணி
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்!
அழைப்பு-தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நூல் கண்காட்சியும் இடம் பெறும்
உங்கள் நண்பர்களுக்கும் நிகழ்வு விபரத்தினை தெரியப்படுத்தவும்.
Mahroof Fauzar இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ: விதை இயற்கை அங்காடி தொடக்க விழா!

தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால் பதிப்பகங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுகூட தமிழில் சிறந்த புனைவுசாரா (non-fiction) எழுத்தாளர்கள் இன்று இல்லை. இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அதன் மூலம் புதிதாக நூல் எழுத ஆர்வமுள்ளவர்கள், தொழில்முறை நூலாசிரியர்களாக ஆவதற்கான பயிற்சியை அது வழங்கவுள்ளது. நம்மில் பலருக்கு பல்வேறு துறையில் நிபுணத்துவமோ, தீராத ஆர்வமோ அல்லது ஆழ்ந்த அனுபவ ஞானமோ இருக்கலாம். அது அரசியல், நாட்டு நடப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், கலாச்சாரம், இயற்கை, சுற்றுச்சூழல், உளவியல், வாழ்வியல் என எந்தவிதமான அறிவுத்துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை, கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப் பா¢சு அளித்து வருகிறார்கள். போட்டியில் கலந்துகொள்ளும் நூல்களை நடுநிலையான நீதிபதிகளைக்கொண்டு தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இவ்வாண்டு நமது உள்ளூர் எழுத்தாளரும் கவிமாலை பொறுப்பாளருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்ட 6 குறு நாவல்களைக் கொண்ட "என் வானம் நான் மேகம்" என்கிற நூலுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பா¢சளிப்பு விழாவில் அன்பழகனுக்கு 10,000 ரூபாய் ரொக்கமும், கேடயத்துடன் சான்றிதழும் கொடுத்துச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உள்ளூர் எழுத்தாளர் மா.அன்பழகனை தமிழ்முரசு பாராட்டுகிறது. தகவல்: 
அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது'சிறுகதைத்தொகுப்புக்கு மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின்சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின்இலக்கிய விருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் இப்போது மீண்டும் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது'சிறுகதைத்தொகுப்புக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின்இலக்கிய விருது கிடைத்துள்ளது,
இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் 'ஈழநாடு" பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். 'தினபதி" கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய 'பாரிஸ் ஈழநாடு" 'ஐரோப்பா முரசு" ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. பாலர் பாடல்கள் அடங்கிய நான்கு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள்; புலம்பெயர்ந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்துடன் 'பரிசு" என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகையொன்றையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டுவந்துள்ளார். இவருக்கான பரிசு பத்தாயிரம் ரூபாää கேடயம், சான்றிதழ் என்பன அக்டோபர் மாதம் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழாவில் வழங்கப்படவுள்ளன. இவர் ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் மனைவியாவார். தகவல்:
தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012

நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட "லெனின் விருது" இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









