நாள்: 15-09-2012 & 16-09-2012
இடம்: கழுகு மலை (கோவில்பட்டி), குற்றாலம்.
கட்டணம்: அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம் தொடங்கவிருக்கிறது. தேசாந்திரி போல் சுற்றுவதற்கு நாம் கோணங்கியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோணங்கியோடு ஒரு நாள் முழுவதும் இருப்பதும், அவர் கையால் வைத்துக் கொடுக்கும் கருப்பட்டி காப்பியைக் குடிக்கவுமே நான் அடிக்கடி கோவில்பட்டி செல்ல விரும்புவேன். இந்த முறை இந்த வாய்ப்பு கலந்துக் கொள்ளும் அனைவருக்கும்.
அடுத்து இரண்டாவது நாள் கவிஞர் விக்ரமாதித்தனோடு குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள முக்கியமான இடங்களை காணவிருக்கிறோம். விக்ரமாதித்தநோடும் நிறைய கலந்துரையாடலாம். உங்களுக்குள் இருக்கும் ஒரு கவிஞனையும் நீங்கள் அடையாளம் காணலாம்.
இந்த பயணம் மிக நேர்த்தியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சொகுசாக சென்று வரும் பயணம் கிடையாது. வாழ்வின் நிதர்சனத்தை அதன் அருகில் சென்று பார்ப்பதே தமிழ் ஸ்டுடியோவின் ஊர் சுற்றலாம் வாங்க பகுதியின் நோக்கம். எனவே சொகுசுப் பயணத்தை விரும்புபவர்கள் இந்த பயணத்தில் கலந்துக் கொள்ள வேண்டாம். தேசாந்திரியாக இரண்டு நாள் கழிக்க விரும்பும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் எல்லாம் கிடையாது. அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதியக் காற்றை, புதிய இடங்களை, வாழ்வின் நிதர்சன உண்மைகளை அறிந்துக் கொள்ள விரும்பும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இதில் கலந்துக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 9840698236
http://thamizhstudio.com/others_osv_5.php
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.