நீர்வை பொன்னையன் அவர்களது 'நினைவலைகள்' நூல் ஆய்வரங்கு (24.06.2012)!
நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் 'நினைவலைகள்' என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது. அப்படியானால் இது அவரது சுயசரிதை எனலாமா? இல்லை என்கிறார்.. " 'நினைவலைகள்' என்ற இந்த நூல் என் சுயசரிதையல்ல. நான் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதியுமல்ல. அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளன் நான். சிலர் எழுத்துத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார்கள். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவன்......... எனது அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகளில் என் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளேன்" என்கிறார். நிச்சயம் படிப்பதற்கு சுவார்ஸத்துடன், நிறையத் தகவல்களையும் உள்ளதாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் யாழ்குடாநாட்டின் நீர்வேலியிலுள்ள ஒலிவைக் குறிச்சி எனப்படும், அக்காலத்தில் பின் தங்கியிருந்த பகுதியில் பிறந்தவர். அங்கிருந்து மட்டக்களப்பு, கல்கத்தா, மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்பு எனப் பல பிரதேசங்களில் வாழ்ந்ததால் கிடைத்த அனுபவங்களால் இந் நூல் சுவாரசியமானதாக இருக்கப் போதில்லை.

ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாநில கவர்னர் திரு. ரிக் பெர்ரி அவர்கள் ஹூஸ்டன் தமிழர்களின் அன்புத் தலைவர் திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களையும் திரு. எட்வர்ட் சம்மர்ஸ் அவர்களையும் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் நியமித்துள்ளார். இந்த வாரியம் மேலும் ஐந்து வருடங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியம் மூலம் தான் தகுதி பெற்ற பொறியாளர்கள் லைசன்சுகள் வழங்குதல், டெக்சாஸ் பொறியியல் பயிற்சி சட்டம் உறுதி மற்றும் டெக்சாஸ் தொழில்முறை பொறியியல் நடைமுறை சட்டம் இயற்றப்படுகிறது. திரு. சாம் கண்ணப்பன் அவர்கள் தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இவர் ஹூஸ்டன்ல் SNC-Lavalin ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மூத்த வடிவமைப்பு பொறியியலாளராக உள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று மேலும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயந்திர பொறியியல் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஹூஸ்டன் தமிழர்களின் இதயம் கனிந்த ஸ்ரீ மீனாக்ஷி கோவிலின் முதன்மை நிறுவனர்களில் ஒருவராவார். “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்; ஒரு மாற்று குறையாத மன்னன் இவனென்று சொல்ல வேண்டும்......” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு இணங்க டெக்சாஸ் சபைதனில் மாபெரும் பெருமைகளை சுமந்து தமிழர்களின் பெருமைகளை மேலும் தலை நிமரச் செய்த திரு. சாம் கண்ணப்பன் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். - 
‘ஈழத்து தமிழ் சமூகங்களைப் பற்றிய சமூகவியல், இனவரைவியல் ஆய்வுகள் போதுமான அளவில் உருவாகவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். தென்னிலங்கைச் சமூகங்கள் குறித்து ஒப்பீட்டு ரீதியில் முக்கியம் வாய்ந்த சமூகவியல் ஆய்வுகள் காணப்படும் அதேவேளையில், தமிழ் சமூகங்கள் பற்றி குறிப்பிடத்தக்க எந்த ஆய்வும் இதுவரை வெளியாகவில்லை. கல்வித்தரம் கூடிய வடமாகாணத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் காட்டப்;பட்ட ஆர்வம் சமூகவியல் ரீதியில் காட்டப்படாமை முக்கிய குறைபாடு எனலாம். இந்தப் பின்னணியில் மு.புஷ்பராஜன் தனது ‘வலை உணங்கு குருமணல்’ என்ற நூலில் குருநகர் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் குறித்த மிகச் சிறந்த இனவரைவியல் பதிவினை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ் சமூகங்களில் இனவரைவியல் ஆய்வில் இது சிறந்த முன்னுதாரணமாக அமையத்தக்கது’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ‘வூட்கிறீன் ஏசியன் சென்ரர் அரங்கில்’ நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.


இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது. எனவே கவிதாயினிகள் தாங்களது தரமான 05கவிதைகளுடன் , உங்களைப்பற்றிய குறிப்புக்களும் , பாஸ்போட் அளவு புகைப் படமும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் - குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் 'அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.
நிகழ்வு: அரிய திரைப்படம் திரையிடல்
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா ஞாயிறு மாலை காந்திநகர் மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. சு. மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்), தலைமை தாங்கினார். மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கனடா நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர் அகில் நூலை வெளியிட மணி ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்) பெற்றுக்கொண்டார்.. தேசியம் என்பது கற்பிதம் என்பதினை வெளிப்படுத்தும் வகையில் நதிநீர் பிரச்சினையில் தமிழர்கள் அவதியுறுவதை இந்த நாவல் வெளிப்படுகிறது. இது தமிழில் 3 பதிப்புகள் வந்துள்ளது. மலையாளத்தில் சபி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை திருவனந்தபுரத்தைச் சார்ந்த சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.( இதற்கு முன்பே சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. )மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பை வழக்கறிஞர் ரவி அறிமுகம் செய்தார்.* மாற்றுக் கல்வி குறித்த நூல்கள் பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” மற்றும் கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்” ஆகியவற்றை பற்றி மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்), வழக்கறிஞர்கள் நீலவேந்தன், கனகசபை, சிவகாமி,ஈஸ்வரன், இளஞாயிறு, வெற்றிச் செல்வன், நந்த கோபால் ஆகியோர் பேசினர்.
வசந்தி தயாபரனின் 'காலமாம் வனம்' என்ற சிறுகதை நூல் வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (2012, யூன் 10ம் திகதி) மாலை நடைபெற இருக்கிறது. வெள்ளவத்தை 57ம் ஒழுங்கையில் (உருத்தரா மாவத்தை) கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப 5.30 மணிக்கு விழா ஆரம்பமாகும். பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தின் பணிப்பாளரான கலாநிதி.செல்வி திருச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். 'காலமாம் வனம்' நூல் வெளியீட்டு விழாவில் நூல் வெளியீட்டு உரையை டொக்டர்.எம்.கே.முருகானந்தன் நிகழ்த்துகிறார். முதற் பிரதியை பெறுபவர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களாகும். சிறப்புப் பிரதியை மூத்த பத்திரிகையாளரான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பெறுகிறார். நூல் பற்றிய கருத்துரையை வழங்க இருப்பவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா ஆவார். இவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மொழிகள் பண்பாட்டுத் துறைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க இருப்பவர்கள் திரு. திருமதி தெளிவத்தை ஜோசப் அவர்களாவார். இருதய சத்திரசிகி்ச்சைக்கு் பின்னான அவரது முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்படத்தக்கது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாட இருப்பவர் திருமதி சொர்ணலதா பிரதாபன்( ஆசிரியை சென் கிளயர்ஸ் கல்லூரி) ஆவார். நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையை திரு.மு.தயாபரன் ஆற்ற, இறுதி நிகழ்வாக ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் திருமதி வசந்தி தயாபரன் வழங்குவார்.
அன்புள்ள நவம் அங்கிள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கில் நான் வந்து படப்பிடிப்புச் செய்தமைக்காக நீங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்குச் சும்மா "you are welcome " என்று மட்டும் பதில் அனுப்ப மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டும் போல இருந்தது. அதனால்தான் சற்று பிந்திவரும் பதில் இது. முதலில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எம்முள் வாழ்ந்த ஒரு பெரியவரின் ஞாபகார்த்த நிகழ்சியைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு. அத்தோடு நீங்கள் எனக்குப் பிடித்தமான காரியத்தைத்தானே உதவியாகக் கேட்டீர்கள். செய்யாமல் விட்டிருப்பேனா? விழாவின் தொடக்கம் ஒரு புது மாதிரியான தொடக்கம். தேசியகீதம் மற்றும் தமிழ் வணக்கம் (நாட்டியத்துடன்) என்பன தன்பாட்டிலேயே நடந்தன. இவை நடைபெறும் போது எல்லோரும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இவை பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என நம்பியதற்கு நன்றி. இல்லாவிடின் வழமைபோல யாரோ ஒருவர் வந்து, "இப்போது இது நடைபெறும் எல்லோரும் எழுந்து......." என்று மணிக் குரலில் அறிவிப்பு விட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பொன்னான நேரத்தையும் கொஞ்சம் சேமித்தீர்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதமாக தொடங்கியிருந்தும், சிலர் பிந்தியே வந்தனர்..பிந்தி வந்தவர்களில் சில பெரியவர்களும், இப்படியான நிகழ்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் என நாம் நினைக்கின்றவர்களும் அடங்கியிருந்த மாதிரி ஒரு உணர்வு!



ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவன் அவர்களின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் அறிமுகவிழா அண்மையில் (15 - 04 - 2012) சென்னை 'இக்சா" மையத்தில் (ICSA CENTRE) நடைபெற்றது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'கலைமாமணி" வி. கே. ரி. பாலன் நூலினை வெளியிட்டுவைக்க எழுத்தாளர் - சட்டத்தரணி கே. நடராசன் பெற்றுக்கொண்டார். கவிஞர் பச்சியப்பன்ää திரு பாஸ்கர்ää கவிஞர் விஜேந்திராää கவிஞர் சொர்ணபாரதி, கவிஞர் யாழினி முனுசாமி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். கலைமாமணி வி. கே. ரி. பாலன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கவிஞர் யாழினி முனுசாமியின் 'மோகினியுடனான சாத்தானின் உரையாடல்" என்ற நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. வி. ரி. இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார். 'மண் மறவா மனிதர்கள்" நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் மாநகரிலும்ää அறிமுக விழாக்கள் அண்மையில் கொழும்பில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் நான்காவது தோற்றம்: கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் கலை இலக்கிய மலரின் 2012ற்கான தொகுப்பு 'வெயில் காயும் பெருவெளி' என்னும் தலைப்பில் இம்முறை வெளிவருகிறது. இதன் இதழ் வெளியீட்டு நிகழ்வு ஜூன் 10ந்திகதி , ஞாயிறு , மாலை 6.30 மணிக்கு 'டொராண்டோ'வில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் வருமாறு:

நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் யாரும் இந்த மூன்று ஆவணப்படங்களையும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. மேலும் ரவிசுப்ரமணியன் மிக சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர். தன்னுடய குரலில் மிக முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை வாய்ப்பாட்டாக உருவாக்கியுள்ளார். அதில் சில பாடல்களும் இந்த இணையத்தில் கேட்க கிடைக்கிறது. தவறவிடாதீர்கள். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









