UK parliamentarians, European parliamentarians, Lords and Diplomats are moved by the Photo Exhibition in Westminster.
The All Party Parliamentary Group for Tamils (APPGT) in collaboration with the British Tamils Forum (BTF) held an exhibition on 31st January 2012, at the UK Parliament building. The exhibition highlighted the current situation of the Tamils in Sri Lanka; and why, the Lesson Learnt and Reconciliation Commission (LLRC) report recently published by the Sri Lankan Government will not deliver justice to the Tamil civilians for the crimes committed by the Sri Lankan Armed Forces during the final stages of the war in 2009.
The event in portcullis house was well attended by MPs from all the major parties, Members of European parliament, Peers from the House of Lords and diplomats from various foreign missions in London and journalists. Photos, books, publications, documentaries and videos were on display. There were also key eyewitnesses to the bloody war in Sri Lanka present at the event. Over one hundred invited honourable guests attended the event and were given information pack containing reports, documents and photographs. A printed version of Tamil National Alliance (TNA) response to the LLRC was also given to the visitors.


சலங்கை நர்த்தனாலயா நுண்கலைப் பீடத்தின் அதிபர் நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் வருடாந்த கலைகளின் சங்கமம் அண்மையில் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பல்வேறுபட்ட கலை வல்லுநர்களின் கலைத் திறமைகள் வெளிப்பட்டதோடு பிரதம விருந்தினராக சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே.சாரங்கன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 'சொப்கா' என்று அழைக்கப்படுகின்ற 'ஸ்கிறீன் ஒவ் பீல்' மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் 'அமெரிக்க உளவாளி'. தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீன தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்.அவ்வகையில் அவரின் சமீப நூல்களான, ”அமெரிக்க உளவாளி”, 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்” , ”ஒன்றுக்கும் உதவாதவன்”‘, ”அமெரிக்கக்காரி“ ஆகிய நூல்களில் ஏதாவது ஒன்று பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த சிறந்த எட்டு கட்டுரைகளுக்கு ரூ4,000 பகிர்ந்தளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட எந்த நூல் பற்றியும் இருக்கலாம். பக்கக் கட்டுப்பாடு இல்லை. தபாலில் அனுப்புதல் சிறந்தது. மின்னஞ்சலிலும் அனுப்பலாம். 31-3-2012க்குள் அனுப்பலாம்.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் இசை விழா & இலக்கிய விழா!
நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமை
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் 'ஸ்நேகா' பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.
2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக சிங்கள மொழியில் எழுதி, இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி





Date: December 22, 2011 - toronto, ontario. – Hockey star Sidney Crosby has been named the International Olympic Committee’s final Youth Olympic Ambassador for the Innsbruck 2012 Winter Youth Olympic Games. “The Canadian Olympic Committee is very proud of Sidney,” said Marcel Aubut, President of the COC. “He gave us a golden Olympic memory in Vancouver. Sidney is a Canadian Olympic hero and now he will help inspire the next generation of Olympic heroes. It was essential to have such an outstanding role model be part of this program.”
சனிக்கிழமை, 24 டிசம்பர் 2011 23:30 .'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்" என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார். வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது." இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா" (ஆயசஒ னுழசஅழல) தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









