முல்லை அமுதன் தொகுக்கும் 'எழுத்தாளர் விபரத் திரட்டு'

எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். 'காற்றுவெளி' என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். மறைந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அடங்கிய 'இலக்கியப் பூக்கள் (தொகுதி ஒன்று)' நூலினையும் வெளியிட்டவர். நூல்கள் பலவற்றையும் வெளியிட்டவர். தற்போது எழுத்தாளர் விபரத் திரட்டு என்னும் நூலினைத் தொகுத்து வருகின்றார். எதிர்காலத்தில் நூலாக வெளிவரவுள்ள இந்நூல் பற்றிய விபரங்களை 'நெய்தல்' இணையத்தளத்தில் காணலாம். தற்போதுள்ள தொகுப்பு பூரணமானதல்ல. பலர் விடுபட்டிருக்கின்றார்கள்; தகவல்களில் ஒரு சில தவறுகள் காணப்படுகின்றன. இவை பற்றிய உங்கள் கருத்துகளை எழுத்தாளர் முல்லை அமுதனுக்கு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் அறியத் தரவும். இந்நூல் மேலும் பூரணத்துவம் பெற்று சிறப்பாக வெளிவருவதற்கு உங்களது கருத்துகள் நிச்சயம் உதவும். மேற்படி நூல் பற்றிய விபரங்களுக்கான இணையத்தள முகவரி: http://writersdetail.blogspot.com/ தகவல்: முல்லை அமுதன் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.
காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3மணி – 6 மணி வரை. இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் - எல்ஸ்மெயர்) . சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் “போருக்குப் பின்னரான சமூக மாற்றமும் முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன். ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2011.
இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; 2 நாட்கள்; 4 அரங்குகள்; 20 அமர்வுகள்; 35 படைப்பாளிகள்; 50 ஆய்வுக் கட்டுரைகள்!
அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.
நண்பர்களுக்கு வணக்கம்! ”தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது. “தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள். ”தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது, மற்றும் நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது ஆகிய இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது. நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
26 July 2011- The longlist for the 2011 Man Booker Prize for Fiction - the ‘Man Booker Dozen' - is announced today, Tuesday 26 July. The 13 books on the list include: one former Man Booker Prize winner; two previously shortlisted writers and one longlisted author; four first time novelists and three Canadian writers. The list also includes three new publishers to the prize - Oneworld, Sandstone Press and Seren Books.
இலங்கையில் படுகொலை - சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் டுடே கீழ்க்கண்ட நாட்களில் 3 பகுதிகளாக ஒலிபரப்ப இருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு விலை கொடுத்து அவர்களை சேனல் 4 லிருந்து வாங்க வைத்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு செய்தியும் மாநிலம் தாண்டி நேஷனல் மீடியாவில் ஒலிபரப்பாகுவரை அந்தச் செய்திக்கான தாக்கம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இருப்பதில்லை என்கிற யதார்த்த நிலையை நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஏற்கனவே பார்த்தவர்களும் இதுவரைப் பார்க்காதவர்களும் தயவுச்செய்து நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் மேன்மேலும் பிற தொலைக்காட்சிகளும் இச்சம்பவத்தை முன்னெடுத்து செல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர் அகில் சாம்பசிவம் ஆகியோர் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,) தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.
கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









