தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்.. நூல் வெளியீடு

தோழர் யோகரட்ணம் அவர்களது நூல் வெளியீடு 03 யூலை 2011 அன்று பாரிசில் இடம் பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.matrathu.com/



கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme

பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்: மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்; தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades, உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர். யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர், இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர். வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan), இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி- (Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்
பருத்தித்துறை அறிவோர் கூடலின் ஏற்பாட்டில் மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதை நூலின் அறிமுகவிழா 14.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார். பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், தொழிலதிபர் திருமதி சக்தி பாலேந்திரா, சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன், இலக்கியச்சோலை து. குலசிங்கம், திருமதி எம்.ஜெயசிறீ(ஜெய பரத சாஸ்திரா) ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். வரவேற்புரையை கவிஞர் தீபச்செல்வன் நிகழ்த்தினார். வாழ்த்துரையை சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் நிகழ்த்தினார். வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் கவிதை நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். நூலின் முதற்பிரதியை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களிடம் இருந்து திலக் ரி. திலகராஜ் (Managing Director, Tilko Jaffna City Hotels) அவர்கள் பெற்று நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்புப் பிரதிகளை திருமதி சக்தி பாலேந்திரா அவர்கள் வழங்கிக் கெளரவித்தார். கவிதை நூலின் மதிப்பீட்டுரையை ஆசிரியர் எஸ். ரமேஸ் நிகழ்த்தினார். ஆசிரியர் சு. குணேஸ்வரன் நன்றியுரையையும் நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஏற்புரையையும் நிகழ்த்தினர்.
இவ்வருடம் (2011) சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக் குமுறல்கள் இவைகளை எல்லாம் வெளிப்படுத்தியதற்காக குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ குறுநாவலைத் தேர்வு செய்துள்ளதாக நடுவர்கள் குறிப்பிட்டனர். திரு. பி. மணிகண்டன், திரு. ப. ஸ்ரீதர், டாக்டர் லட்சுமி ஆகியோர் இப்போட்டிக்கு நடுவர்களாகக் கடமையாற்றினர். தேர்வின்போது கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர், பதிப்பாசிரியர் திரு. நாராயணசாமி ஆகியோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவு குறுநாவல் போட்டியிலும் ஈழத்தமிழர்களின் சோகக் கதை சொல்லும் குரு அரவிந்தனின் ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற குறுநாவல் பரிசு பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
வணக்கம்! ஆனந்தவிகனும் , 'டிஸ்கவரி புக் பேலஸு'ம் இணைந்து முதன் முறையாக 'டிஸ்கவரி புக் பேலஸி'ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். கழிவு இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம். முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற
கவிஞரும்,பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில் மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்தம்TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.
கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது. 
சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் 'வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.'. பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 
அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் - இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon Rise, London SE13 5ES; - 24.04.2011 காலம் - 24.04.2011 ஞாயிறு மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை. சங்க இலக்கியத்தின் இன்றைய தேவைகள்” என்னும் கலந்துரையாடல் நூல் வெளியீட்டை அடுத்து இடம்பெறும். திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டு இந்நிகழ்வில் ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரனின் “ ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ தத்துவம் தந்த அப்பர் சுவாமிகள்”, என்னும் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறும்.
அகராதிகள், கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் அந்தந்தக் காலக்கட்ட மொழியின் இயல்பிற்கும் ஏற்ற வகையில் வளர்ந்து வரும் துறையாகும். மொழிக்கு இன்றியமையாதது அகராதிகள் என்று கூறினாலும் அதன் காலத்தை உணர்ந்து புதிய புதிய சொல்லாட்சிகளை உருவாக்கித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். இஃது ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இன்று கணிப்பொறி இணையம் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெற வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒரு பகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர். மின் உலகில் தமிழ்மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்து (75) உள்ளன. இவைகளின் பணிகள், எந்தெந்த மின் அகராதிகள் தமிழில் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









