தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் 'தான்ஸ்ரீ் கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை' நடத்தும் 'தான்ஸ்ரீ் சோமா புத்தகப் பரிசு" ; 10,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் 5, 00, 000)

அனைத்துலக நாடுகளிலிருந்து படைக்கப்படும் நூல்களில் தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைவிக்கும் சிறந்த நூலை ஈராண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்து பரிசளித்தல் [- தகவல் : 'விருபா' து. குமரேசன் ].... விரிவான தகவல்கள் உள்ளே

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் 'ஸ்நேகா' பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.
2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக சிங்கள மொழியில் எழுதி, இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி
07.01.2012 சனிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணி முதல் 08.30 வரை / இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.30 வரை.





Date: December 22, 2011 - toronto, ontario. – Hockey star Sidney Crosby has been named the International Olympic Committee’s final Youth Olympic Ambassador for the Innsbruck 2012 Winter Youth Olympic Games. “The Canadian Olympic Committee is very proud of Sidney,” said Marcel Aubut, President of the COC. “He gave us a golden Olympic memory in Vancouver. Sidney is a Canadian Olympic hero and now he will help inspire the next generation of Olympic heroes. It was essential to have such an outstanding role model be part of this program.”
சனிக்கிழமை, 24 டிசம்பர் 2011 23:30 .'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்" என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார். வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது." இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா" (ஆயசஒ னுழசஅழல) தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.






பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..! ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் ((50, Place de Torcy, 75018 Paris - Métro: Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
அருமை நண்பர்களே! ‘உயிர்மை’ இதழ் தனது நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ‘உயிர்மை’யின் 100ஆவது இதழ் வெளிவருகிறது. டிசம்பர் 1 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் (மாவட்ட மைய நூலகம், (LLA BUILDING),735, அண்ணா சாலை, சென்னை-2) நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பிதழின் முதல் பிரதியை இந்திரா பார்த்தசாரதி வெளியிட, எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். எங்களது இந்தப் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய ‘உயிர்மை’- ‘உயிரோசை’ வாசகர்கள் இந்த நிகழ்வில் நேரடியாகவோ மானசீகமாகவோ பங்கேற்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்களின்றி இந்தப் பயணத்தின் ஓரடியும் சாத்தியப்பட்டிருக்காது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









