07.01.2012 சனிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணி முதல் 08.30 வரை / இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.30 வரை.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை
ஐநா நிபுணர் குழு அறிக்கை - சேனல் நான்கு ஆவணப்படம் போன்றவற்றுக்கு பதிலிருக்கும் முகமாகவும், இலங்கையில் இன்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலங்கை அரசு. சர்வகட்சிகளைக் கூட்டி அவர்களது ஆலோசனையின் பின் இந்த அறிக்கiயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசின் நல்லிணக்க நோக்கங்கள் நேர்மையானவைதானா என்பதனை இன்றைய விழுதுகள் நிகழச்சியில் ஈழத்தின் மூன்று அரசியல் ஆளுமைகள் விவாதிக்கிறார்கள்.
கலந்து கொள்பவர்கள்:
திரு. மனோ கணேசன்
திரு. வி.சிவலிங்கம்
திரு. வ.ஐ.ச.ஜெயபாலன்
உரையாடலில் கலந்துகொள்ளுமாறு குளோபல் தமிழ் வானொலி நேயர்களை அன்புடன் அழைக்கிறோம்;
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்
தகவல்: யமுனா ராஜேந்திரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.