2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக சிங்கள மொழியில் எழுதி, இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் பதிப்பிக்கும் இந்நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
அழைப்பிதழ் இங்கே – http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html , http://mrishaanshareef.blogspot.com/2012/01/invitation-to-my-book-launch-in-india.html
அனைவரும் வருக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.