காந்தள் பூக்கும் தீவிலே - புதிய பாடல் (2011)
இசை:கே.ஜெயந்தன் ; வரிகள்:கவிஞர் அஸ்மின்; பாடியோர்: கே.ஜெயந்தன் & கே.ஜெயப்பிரதா
ஈழத்தின் தமிழ் இசைத்துறை மிகவேகமாக வளர்ந்து வருகின்றது.ஈழத்திலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர்.நாங்கள்தான் அவர்களை கண்டுகொள்ளாது இருக்கின்றோம்.இன்று வெளியாகியுள்ளது ஈழக்கலைஞர்களின் புதிய பாடல்.இதனை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் ஈழத்து கலைஞர்களின் திறமை எந்தளவுக்கு உலகத்தரத்திற்கு வளர்ந்து வருகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
காந்தள்பூக்கும் தீவிலே எனஆரம்பிக்கும் இந்த பாடல் ஈழத்தினை குறியீடாக கொண்டுள்ளது.காந்தள் என்பது கார்த்திகைப்பூவை குறிக்கும்.கார்த்திகைபூ தமிழ் ஈழத்தின் தேசியப்பூ இதனை மிக நுட்பமாக சங்கத்தமிழோடு கலந்து எழுதியிருக்கும் கவிஞரை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்தப்பாடலுக்கு இசையமைத்து பாடியிருக்கின்றார் இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் அவர்கள்.இவர் ஏற்கனவே பலகுறும்படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசனாகமுடிசூடிக்கொண்டவர்.
பாடல்வரிகளை பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கின்றார்.2010இ2011ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 2 முறை பெற்றிருக்கும் பலவிருதுகளின் சொந்தக்காரர்.'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக இவர் அறிமுகமாகியுள்ளார்.இந்த இளம் கலைஞர்களின் முயற்சியை வாழ்த்தி வரவேற்பது எமது அனைவரதும் தார்மீகடமையாகும்.
காந்தள் பூக்கும் தீவிலே - புதிய பாடல் (2011)
இசை:கே.ஜெயந்தன்