நாள்: 26-11-2011, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் (10 AM)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
பயிற்சிக் கொடுப்பவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
நன்கொடை: ரூபாய் - 250/-
வணக்கம் நண்பர்களே, தமிழில் மாற்று ஊடக வளர்ச்சியின் மிக பெரிய பங்கு வகிப்பது Film Appreciation எனப்படும் திரைப்பட ரசனையே. ஆனால் தமிழ் திரைப்படங்களால் பெரும்பாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பார்வையாளர்களால் தங்களுக்கான உலக சினிமா ரசனையை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இன்றும் பல உலகப் படங்களை புரியவில்லை என்று சொன்னால் அருகில் இருப்பவர்கள் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்றெண்ணி புரிந்தது போல் பாவனை செய்யும் உலக திரைப்பட ரசிகர்களே அதிகம்.
ஆனால் திரைப்படம் எடுப்பது மட்டுமல்ல. திரைப்படம் பார்ப்பதும் ஒரு கலைதான். எப்போதும் தாங்களாகவே திரைப்படம் எடுத்து தங்களை செம்மைப் படுத்திக் கொள்ளும் திரை அறிஞர்களைப் போல சிலர் தாங்களாகவே திரைப்படங்களைப் பார்த்து தங்கள் ரசனையை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கானது அல்ல இந்த ரசனை வளர்ப்பு பயிற்சி. ஆனால் எதையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம், எதிலும் கொஞ்சம் முறையான பயிற்சி வேண்டும், உலகத் திரைப்படங்களை இன்னும் ஆழமாக ரசிக்கத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற சுயப் பிரக்ஞை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திரைப்பட ரசனை பயறிசி வகுப்பு.
எனவே இதில் ஆர்வமுள்ள எல்லாரும் கலந்துக் கொள்ளலாம்.
வகுப்பின் தொடர்ச்சியாக திங்களன்று மாலை நான்கு மணி முதல் இரண்டு உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பும், விவாதமும் நடைபெறும்.
இவை அனைத்திற்கும் ஒரு சிறிய நன்கொடை உண்டு. இதனை கட்டணம் என்கிற வகையில் வைக்க முடியாது.
நன்கொடை: ரூபாய் - 250/-
தொடர்புக்கு: 9840698236
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.