விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,) தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.