கனடா: தமிழ் - ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை!


தமிழ் - ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை
Sat May 19th, 2012 @ 3:00 P.M - 6:00 P.M



தமிழ் - ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை
Sat May 19th, 2012 @ 3:00 P.M - 6:00 P.M
This mothers day, Ranjini and her two sons, aged 6 and 8, faced their fourth night of indefinite detention - without charge, without trial, without appeal. Ranjini was verified as a refugee last year after fleeing the civil war in Sri Lanka. On Thursday night, she was told to pick up her kids from school in Melbourne and meet Department of Immigration officials. ASIO had given her an averse security finding. They were flown to Sydney and detained in Villawood detention centre, where they will stay indefinitely. They have no right of appeal. 46 other refugees are currently detained under the same circumstances. On Friday morning, one of them, Kumar, attempted suicide in a Melbourne detention facility. No matter what, we mustn't allow anyone - let alone children - to be detained indefinitely without charge, trial or appeal. A Parliamentary Committee has already recommended that there should an independent review and appeals process for ASIO findings - a basic principle of justice.
SIGN THE PETITION
Add your name before this petition is delivered to the Attorney-General and Immigration Minister. Attorney-General Nicola Roxon and Immigration Minister Chris Bowen, In Australia no person should be held indefinitely without charge, trial or appeal. Please ensure that ASIO findings can be appealed and independently reviewed. SIGN THE PETITION

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...'
http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh7.htm
வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி.
அன்புடன்,
வீ.சு.இராமலிங்கம்
தஞ்சாவூர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்
முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.
இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் எழுச்சி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது.
நேரம்: மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்: OSLO S ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது.

இடம் - கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ( சங்கரப் பிள்ளை மண்டபம் )
திகதி - 13.05.2012
நேரம் -காலை 09.30 மணி
மதிப்போர்கள் வரலாம் எங்களை மகிழ்வித்துச் செல்லலாம். அழைப்பது 'தடாகம்'' கலை இலக்கிய வட்டம்.

அன்புடையீர், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த தினத்தை நினைவூட்டிக் கனடாவில் பேராசிரியரைக் கனம் பண்ணும் வகையில், சிறப்புப் பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், பேராசிரியர் பங்கேற்ற இரு ஆவணப்படங்களின் திரையீடும் அதிபர் பொ. கனகசபாபதி தலைமையில் நிகழவுள்ளன. தங்களையும் இந் நினைவரங்கில் பங்கேற்க வருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம்.
காலம்: மே மாதம் 20ந் தேதி. 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணிமுதல் 5.30 வரை; இடம்: ஸ்காபரோ சிவிக் சென்டர். Scarborough Civic Centre 150 Borough Drive (North-west corner of McCowan Road and Ellesmere Road) Toronto, ON M1P 4N7 (Public transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre.)
மேலதிக விவரங்களுக்கு
க. நவம் 416-6276583 - மூர்த்தி 647-9690175
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இரண்டு மாதம் இந்தியாவில் நான் இருந்தேன். முதல் மாதம் கேரளாவில் வைத்தியம். அதன் பின் தமிழ்நாடு போய் அருமை நண்பர்களை சந்தித்தேன். என்னைக் கேரளாவிலும் என் நண்பர்கள் சந்தித்தார்கள். பல இடையூறுகள் இருந்தாலும் சில இனிய நினைவுகள். என் வாழ்வில். அன்பால் என்னை வாழவைக்கும் என் நண்பர்கள். வாழ்க அவர்கள் அன்பு.
புகைப்படங்களுக்கு ... https://picasaweb.google.com/105829499702534906589/April242012
சந்திப்போம்
நிலா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஊடக அறிக்கை - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) -
இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக் கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள் இனப்படுகொலை நாள் (Holacaust) என ஆண்டுதோறும் அனுட்டித்து வருகிறார்கள். அதனை ஒத்த ஒரு இனப்படுகொலை (Genocide) முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தேறியது. அய்.நா வல்லுநர் குழு அறிக்கையின்படி இந்த கால கட்டத்தில் 40,000 மக்கள் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சு, செல்லடி காரணமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எமது மக்களை சிறீலங்கா இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது. மக்களைப் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுமாறு அறிவித்துவிட்டு அதே இலக்கை நோக்கி பன்னாட்டு சமூகத்தால் தடைசெய்யப்பட்ட தீமுறிக் குண்டுகளையும் (phosphorous) கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) சரமாரியாக ஏவி முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தது.
எனவே இந்த இனவழிப்பு நாளான மே 18 யை தேசிய துக்க நாளாக அனுட்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் மடிந்த மக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்துவதோடு கனடிய மையநீரோட்ட மக்களின் கவனத்துக்கும் கொண்டு வரலாம்.

தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டமும்! ஞாயிறு மே 6, 2012 மாலை 5 மணி. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம். விபரங்கள் ... உள்ளே
இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.
வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது.

முதல் நிகழ்வு
காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை
'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் 'மூலதனம்' (தமிழில்), மார்க்ஸ்-எங்கெல்ஸ்ஸின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உட்படப் மேலும் பல நூல்களை நீங்கள் வாசிக்க முடியும். இதுதவிர ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள், அவற்றின் அறிக்கைகள், புலம் பெயர்ந்த தமிழிலக்கிய உலகில் உருவான சஞ்சிகைகள் போன்ற பல ஆக்கங்களை, தகவல்களை இங்கு ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கு ஆக்கங்களை வாசிப்பதற்கு நீங்கள் உங்களை இத்தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எதுவுமில்லை. அதன்பின் ஆக்கங்களை வாசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் செல்ல வேண்டிய இணையத்தள் முகவரி: http://www.padippakam.com - ஊர்க்குருவி -

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை சிட்னி நூல் வெளியீட்டுக்குழு மேற்கொண்டுள்ளது. இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும். இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
Mathubashini, 0421791490- Sownthary -0433343007 -Bamathi-0431568568
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'புதிய நூலகம்' செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ் வெளிவந்துள்ளது.
http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.02.15.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் எட்டாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும். இச் சஞ்சிகைக்கான பவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.
- ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் 'நீர்வளையங்கள்' [தமிழியல் 1988], 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

ஏற்பாடு
1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.

39வது இலக்கியச்சந்திப்பு: விளிம்பும் விசாரணைகளும்
ரொறொன்டோ கனடா மே 5, 2012 ...... மேலதிக விபரங்கள் .. உள்ளே
ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.[ நன்றி: http://inioru.com/?p=27454 ]

சிறுகதை
அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார்
சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன்

நாள்: மே 4, 5, 6
இடம்: குன்றத்தூரிலுள்ள விவசாயப் பண்ணை.
கட்டணம்: 1000/- ( தங்குமிடம் / உணவு உட்பட. )
நடத்துபவர்: ஆர். ஆர். சீனிவாசன்
(தெருப் புகைப்படக்கலைஞர்)

‘முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தமிழக அறிவுலகிலும் சமூக மட்டத்திலும் ஆறாத காயங்களை ஏற்படுத்தி ஈழத்தமிழர்கள் பற்றிய சமூகப் பார்வையை முற்றாக மாற்றிப் போட்டிருக்கிறது. ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப்பின் பத்து ஆண்டு காலமாக ஈழத்து நிகழ்ச்சிகள் பற்றி எந்த எதிர்வினையும் காட்டியிராத தமிழகச் சூழலில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை அணுகும் பெரும்பாலானோரின் நோக்கங்கள் தமது நலன்கள் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன். இதற்காக ஆத்மார்த்தமாக அக்கறை கொண்டுள்ளவர்களை கொச்சைப் படுத்துவதாகக் கருதவேண்டியதில்லை. தமிழகத்தின் ஊடகங்களும் அரசியல் பிரமுகர்களும் ஈழப் பிரச்சினையை சுரண்டல் நோக்கத்துடனேயே பார்க்கிறார்கள் என்பதில் பெருமளவு உண்மை உண்டு என்பதில் சந்தேகமில்லை’ என ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ‘காலச்சுவடு’ என்ற தமிழக சஞ்சிகையின் பதிப்பாளர் சு.கண்ணன் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈழத்துப் பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு மற்றும் விமர்சனம், தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் பற்றிய கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை 'வரலாறு' என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.