யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்
இயக்குநர்
ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம்.
Director
Seikh Ismail Memorial Production
முஸ்டீன் எழுதிய 'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்'
கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா
2012 மே 17 வியாழக்கிழமை, பி.ப.4.31 மணி.
தலைமை
Dr. A . ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
(தலைவர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்)
சங்கரப்பிள்ளை மண்டபம்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
இல 57,உருத்ரா மாவத்தை,கொழும்பு-06
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
நிகழ்ச்சி நிரல்
இறைவணக்கம்
வரவேற்புரை - ஷாமிலா ஷெரீப்
தலைமையுரை
நூல் அறிமுகம்: கௌரவ பஸீர் சேகுதாவூத் பா.உ.
(கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர்.)
கவிதை திரையிடுதல்
நூல் ஆய்வுரைகள்
தெ.மதுசூதனன் (ஆசிரியர்-ஆசிரியம்)
சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்ரா
(துணைத் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
வாழ்த்துரை : கௌரவ பாஸ்கரா
(மேல் மாகாண சபை உறுப்பினர்)
நூல் வெளியீடு
முதற்பிரதி : புரவலர் ஹாஸிம் உமர்
ஏற்புரை : முஸ்டீன்
நன்றியுரை.
போராலும், போரிலும், மண்ணில் மாவீரம் விதைத்த அனைத்துயிர்கட்கும் இது சமர்ப்பணம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.