உதயகுமாரி நிலாவின் 'இந்திய உலா' நூல் பற்றிய எனது சில மேல்வாரிக் கருத்துகள்!
256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் 'நிலாவின் இந்திய வைத்திய உலா' என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.

அனைவருக்கும் வணக்கம், கடந்த 19-10-2012 அன்று என்னுடைய கவிதைநூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் திரு. வதிலைபிரபா அவர்களும், திரு. உதயகண்ணன் அவர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட நினைவுகள். தொடர்ந்த மழை. மறக்க முடியாத அனுபவம். பசுமையான நினைவுகள். மின்னஞ்சல் ஊடாக பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். நானும் நன்றி தெரிவித்தேன். விடுபட்டவர்களுக்கும் சேர்த்தும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
சென்ற ஞயிற்றுக்கிழமை கனடாவில் உள்ள ஸ்காபரோ விலேச் கொம்யுனிற்ரி மண்டபத்தில் ((Scarborough Village Community Center) குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் வைபவம் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் வரலாற்றுப் பதிவான ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ என்ற பாராட்டு நூலும் சோக்கல்லோ சண்முகத்தால் தொகுத்து, மொன்றியல் இரா. நடராஜா அவர்களின் அனுசரனையோடு வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தலைக்கோல் விருது வழங்கும் விழாவை மொன்றியல் இரா. நடராஜா, தா. சண்முகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்புடையீர், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

யாவர்க்கும் எனது இனிய வணக்கம். இந்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை 4 30 மணியளவில் எனது இரு நூல்களின் அறிமுகம் 92, High Raod, London NW10 2SF இலமைந்துள்ள Willesden Green Library யில் இடம்பெற இருக்கின்றது. அது மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து இல்ண்டன் தமிழ் வானொலியின் 105 ஆவது மேடை நிகழ்வான ` பொன்மாலைப் பொழுது` என்ற ”எம்மவர் கலைத்திறன்களின் சங்கமம்” நிகழ்வும் நடைபெற இருக்கின்றது. இந்த மடலுடன் இணைத்துள்ள அழைப்பிதழினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கொண்டு வருகை தாருங்கள். அழைப்பிதழ் 
‘ஆனைக்கோட்டைக்கு புகழ்பூத்த ஒரு இசைமரபும், இசைக்கலைஞர்களும் உள்ளனர். அந்த இசை மரபில் முற்போக்கு எழுத்தாளரும், மிருதங்கக் கலைஞருமான எஸ்.அகஸ்தியருக்கு தனித்த இடம் ஒன்று உண்டு. அந்த இலக்கியப் பெருமகனின் பேரனார் அகஸ்ரி ஜோகரட்னம் ஆனைக்கோட்டை இசைமரபின் இளம் வாரிசாக லண்டனில் மிருதங்க அரங்கேற்றம் நடத்தியிருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ என்று லண்டனில் நடைபெற்ற அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பிரபல மிருதங்க வாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்த சர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ‘அண்மைக் காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசை ஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும். தாளம் தவறாமல், சுருதி பிசகாமல் சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே. சாரங்கனின் வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அவர் வாசித்த மிருதங்கம் பரவசமூட்டுவதாகும். இந்த அபூர்வமான மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு உண்மையில் பூரணமான இசைக்கச்சேரி போல அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வன் அகஸ்ரி தனக்கு வாய்த்திருக்கும் இந்த இசைத் திறமையை தொடர்ந்தும் பேணி இத்துறையில் கீர்த்தி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்! அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க 'தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்' என்னும் 'ஒரு பேப்பர்' கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இதற்குரிய விருதைச் சென்ற 02-10-2012ஆம் திகதியன்று நாமக்கல்லில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவ தியாகராஜா அவர்களுக்கு வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நூல் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் அணிந்துரையுடன் தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது. சிவ தியாகராஜா கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலண்டனில் தமிழ் மக்களின் நோயியல் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மருத்துவத்துறையில் 40 ஆண்டுகளாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இந்திய பிரித்தானியப் பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் கதைகளையும் தொடர் நாவல்களையும் எழுதியவர். இதுவரை 10 தமிழ் நூல்களும் நான்கு ஆங்கில நூல்களும் வெளியிட்டவர். லைலா-மஜ்னு, தேன் சிந்தும் மலர், கில்கமேஷ் காவியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், மருத்துவக் களஞ்சியம், A Review of Ectopic Pregnancy, The King of Hearts, Peoples and Cultures of Early Sri Lanka, Siva Temples of Early Sri Lanka ஆகியன இவரது முக்கிய படைப்புக்கள். இவர் எமது பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஈழவர் இலக்கியச் சங்கமும் அவரைப் பாராட்டுகின்றது.
காலம் - 06.10.2012 சனிக்கிழமை
[நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் 'பதிவுகள்' தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்]
தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு ; எதிர்வரும் 07.10.2012 ஞாயிறு பி.ப 3.00மணிக்கு பாரீசில்( பிரான்ஸ்) நடைபெற இருக்கின்றது. இந் நினைவு நிகழ்வில் பிலோமினா லோறன்ஸ் அவர்களின் அரசியல் - சமூகப் பயணங்களின் ஒளிப்படத் தொகுப்பான "நினைவின் யாத்திரை "யும், "நினைவுத் திசை " என்னும் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூலும் வெளியிடப்பட இருக்கின்றன. இந் நினைவு நிகழ்வில் திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களோடு சமகாலத்தில் பயணித்த அரசியல் - சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவ பகிர்வுகளையும் கருத்துக்களையும் வழங்கவுள்ளனர். இந் நிகழ்வு பின்வரும் முகவரியில் நடைபெறுகின்றது.
[பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான திரு. நுணாவில் கா.விசயரத்தினத்தை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவரது கட்டுரைகள் பல பதிவுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவரது 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' என்னும் நூலுக்கு இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) வழங்கும் 2011ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம். - பதிவுகள்] இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' என்ற நூல் தமிழ் மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து ஆண்டு தோறும் சிறந்த படைப்புக்களை தேர்வுசெய்து விருது வழங்கிவருகிறது. சென்ற ஆண்டு வெளியான பதின்னான்கு நூல்கள் இவ்விருதுக்கு தகுதியானவையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் கனடாவாழ் எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பிற்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. அகிலின் இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஏற்கனவே பல விருதுகள் கிடைத்துள்ளன. மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கியவிருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கியவிருது கிடைக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி - 2012 இல் இந்நூலுக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. பெருமைக்குரிய இப்படைப்பாளிகள் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்ற கலைவிழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









