இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் 'ஈழநாடு" பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். 'தினபதி" கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய 'பாரிஸ் ஈழநாடு" 'ஐரோப்பா முரசு" ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. பாலர் பாடல்கள் அடங்கிய நான்கு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள்; புலம்பெயர்ந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்துடன் 'பரிசு" என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகையொன்றையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டுவந்துள்ளார். இவருக்கான பரிசு பத்தாயிரம் ரூபாää கேடயம், சான்றிதழ் என்பன அக்டோபர் மாதம் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழாவில் வழங்கப்படவுள்ளன. இவர் ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் மனைவியாவார். தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.