தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012
நாள்: 15-08-2012, புதன்கிழமை
இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்)
நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM)
சிறப்பு விருந்தினர்கள்
பாலு மகேந்திரா,
வசந்த்,
பாலாஜி சக்திவேல்,
பவா செல்லதுரை,
மருது,
கூத்துப் பட்டறை ந. முத்துசாமி,
காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன்,
நாடகவியலாளர் ஸ்மைல் வித்யா,
லெனின் & அம்ஷன் குமார்
நண்பர்களே எதிர்வரும் புதன்கிழமை (சுதந்திர தினத்தன்று) சென்னை எம்.எம். திரையரங்கில் நடக்கும் தமிழ் ஸ்டுடியோவின் "லெனின் விருது வழங்கும் விழா"விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். மாற்றுத் திரைப்படக் கலைஞர்களுக்காக தமிழில் வழங்கப்படும் ஒரே விருதான இந்த லெனின் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று மாற்று திரைப்படக் கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வாருங்கள் என்று அழைக்கிறேன். மேலும் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் குடும்பமாக வந்து நிகழ்வை சிறப்பிக்க வேண்டும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.
நிகழ்வில் தொடக்கத்தில் எஸ். நாதன் வழங்கும் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
அனுமதி இலவசம். அனைவரும் வருக..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.