தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை, கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப் பா¢சு அளித்து வருகிறார்கள். போட்டியில் கலந்துகொள்ளும் நூல்களை நடுநிலையான நீதிபதிகளைக்கொண்டு தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இவ்வாண்டு நமது உள்ளூர் எழுத்தாளரும் கவிமாலை பொறுப்பாளருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்ட 6 குறு நாவல்களைக் கொண்ட "என் வானம் நான் மேகம்" என்கிற நூலுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பா¢சளிப்பு விழாவில் அன்பழகனுக்கு 10,000 ரூபாய் ரொக்கமும், கேடயத்துடன் சான்றிதழும் கொடுத்துச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உள்ளூர் எழுத்தாளர் மா.அன்பழகனை தமிழ்முரசு பாராட்டுகிறது. தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.