பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).
வல்லரசுகள் கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும், வாழ்வையும் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான இன்றைய கால கட்டத்தில், பிரான்சில் பாரளுமன்ற அமைப்புசாரா தீவிர இடதுசாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலமும் -ஒன்றுகூடலும் பாரிசில் மிகச் சிறப்பாக (01.05.2013) நடைபெற்றது. சர்வதேச ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளை கண்டித்தும், கோசங்களும்- கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் பிரான்சில் வாழும் பல்லின மக்களினது இடதுசாரி செயற்பாட்டு இயக்கமான சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (comité de Défence Social International) கலந்துகொண்டது. இவ் ஊர்வலத்தில் இலங்கை அரசின் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், இன அழிப்பு யுத்ததிற்கு எதிராகவும் கண்டனங்களும் கோசங்களும் எழுப்பப்பட்டன. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் சார்பிலும் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும்.

முல்லைத்தீவு என்றவுடன் எனது நினைவுக்கு முதலில் வருபவர்கள், நிலக்கிளி பாலமனோகரன், முல்லை அமுதன், முல்லையூரான், முல்லைமணி, முல்லைசகோதரிகள். கலை, இலக்கியவாதியாக பயணிப்பதனால்தானோ என்னவோ இவர்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவார்கள். இவர்களைப்போன்று பலர் எழுத்து மற்றும் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவானது. சிலருடன் எனக்கு கடிதத்தொடர்புகளும் இருந்தன. முல்லையூரான் மறைந்துவிட்டார். நிலக்கிளி பாலமனோகரன் ஈழத்து இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவர். டென்மார்க்கில் வசிக்கிறார். அவரது நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தகுந்த கவனம்பெற்றவை. முல்லை அமுதன் காற்றுவெளி இதழையும் வெளியிட்டவாறு இங்கிலாந்தில் நூல் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்திவருபவர். முல்லை சகோதரிகள் இலங்கையில் பல பாகங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள். தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனக்கு இந்தச்சகோதரிகளுடன் நேரடி அறிமுகம் இல்லை.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுக்கும் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.
உலக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் மேதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வல்லரசுகளோ கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டியபடி இருக்கிறது. ஐரோப்பாவில் இளம் சந்ததியினர் படித்துவிட்டு தொழில் வாய்ப்பு ஏதுமின்றி சூன்யமான எதிர்காலத்தைச் சுமந்தபடி இருக்கின்றனர். வங்கிகள் பொருளாதார நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை சந்தித்த காலம் போய், இப்போது நாடுகள் வங்குரோத்து நிலையில் விளிப்பில் தளம்பிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய கடனை பல நாடுகள் தவிர்க்க முடியா நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் மீள முடியாக் கடன் சுமையை வருங்கால சந்ததிக்கு வழங்கியுள்ளன. உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின் பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள். ‘பொருளாதார நெருக்கடி’ என்று ஒற்றை வார்த்தையில் கூறப்படும் பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளையால் பணமும் மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள நிலையில் மக்களின் வறுமையும், அழிவும் தவிர்க்கமுடியாத நியதியாகிவிட்டது.

மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன்ää திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: 


காலம்: 01ஏப்ரல் 2013 (வங்கி விடுமுறை தினம்) | காலை 10.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்: Trinity Community Centre, East Avenue, Eastham, London E12 6SG, (Nearest Underground: Eastham)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









