தமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, இந்திய அளவிலும், உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில், உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.
மலேசிய இலக்கியங்களை உலக அளவில் அறிமுகம் செய்யும் விதத்தில்,முதல் கட்டமாக இவரது தலைமையில் 2004 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கும் புதுவைக்கும் பெங்களூருக்கும் சுற்றுலா மேற்கொண்டு கருத்தரங்களும் சொற்பொழிவுகளும் நடத்தியது. அப்போது அவர்களுக்கு மூன்று மாநிலங்களிலும் உற்சாகமான வரவேற்புகள் வழங்கப்பட்டன.பல முக்கிய எழுத்தாளர்கள்,கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனிப்பை அவர்கள் பெற்றார்கள். அப்போது அங்கு வழங்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம்’ (2004) என்னும் நூல் மலேசியத் தமிழ் வடிவங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தியது.
மேலும்,மலேசியத்தமிழ்எழுத்தாளர்களில்இருப்பவர்கள்,மறைந்தவர்களின் 358 பெயர்கள் அடங்கிய எழுத்தாளர்கள் அகர முதலியாகத் தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்’ (2004) எனும் நூல் முக்கியமானது.
ம.எ.ச.வெளியிட்ட ‘மலேசிய,சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் (2005) ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’( 2007) ஆகிய நூல்கள் மூலம் நமது மலேசிய இலக்கியங்களைவெளியுலகிற்குஅறிமுகம் செய்துவைத்ததுடன், தமிழக/புதுவைப் பல்கலைக்கழகங்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லப்படுவதில் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் பணி நினைவு கூறத்தக்கதாகும்.
தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு மலேசிய மண்ணில் உரியவரவேற்பும் கௌரவமும் அளித்துச் சிறப்பிக்கும் பணியை பல்லாண்டுகளாக தொடர்ந்து செய்துவரும் இவர் தமிழகத்தின் பிரபல கவிஞர்வைரமுத்து,எழுத்தாளர்களானபிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன், நாவலாசிரியர் சுப்பிரபாரதிமணியம்,நடிகரும்,டைரக்டருமான சேரன் போன்றவர்களைக் கொண்டு மலேசிய எழுத்தாளர்களுக்குச் சிறுகதை,நாவல் போன்ற துறைகளில் பயிற்சி பட்டறை நடத்தி மலேசியாவில் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சியில் தமிழக எழுத்தாளர்களின் பங்களிப்பையும் பெற்றது சங்கம் இவரின் கீழ் மேற்கொண்ட பயன் மிக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்.இதன் மூலம் நமது படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழக எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி, உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு எல்லாம் இலக்கியப் பயணம் மேற்கொண்டு தமிழ் மொழி,இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் திரு.பெ.இராஜேந்திரன் என்றும் நினைவு கூறத்தக்கதாகும்.
அண்மையில்,உலகத் தமிழ் தஞ்சைப் பல்கலைக்கழகம்,மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘கரிகாழன் சோழன்’ விருதுகளும் இவரின் தொலைநோக்குப் பார்வையாலும்,அயரா உழைப்பினாலும் விளைந்த அனுகூலங்கலாகும்.
எதிர்காலத்தில், இவரது சீரிய பணிகளாலும், தமிழ்த்தொண்டுகளாலும் மலேசியத் தமிழ் இலக்கியம் மேலும் சிறப்படையும் என்று நம்பலாம்.உலகத்தரத்திலான பல விருதுகளும் தவறாமல் அவரை வந்து சேர வாழ்த்துவோம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.