மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன்ää திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும் நூல்கள்:-
1. நடேசனின் Lost in you ( உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த திருமதி பார்வதி வாசுதேவ்
2. முருகபூபதியின் மதகசெவனெலி (தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்த்தவர் இலங்கையைச்சேர்ந்த ஜனாப் ஏ.ஸி.எம். கராமத்
3.நடேசனின் சமணலவௌ (வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு)
மொழிபெயர்த்தவர் - இலங்கையைச்சேர்ந்த திரு. மடுளுகிரியே விஜேரத்ன.
மெல்பன், ஹியூம் மாநகரசபையின் உறுப்பினர் திரு. சந்திரா பமுனுசிங்க அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாநகர மேயர் திரு. ஜியோஃப் பொட்டர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். திரு. ராஜரட்னம் சிவநாதன், கலாநிதி ஸ்ரீமா எதிரிவீர, திரு. பந்து திஸாநாயக்கா, கடப்பத்த மாத இதழின் ஆசிரியர் திரு. சாமந்ததென்னகே ஆகியோர் உரையாற்றுவர். நூலசிரியர்கள் ஏற்புரை வழங்குவர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.