‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதம உரையில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இருந்த வருகை தந்திருந்த ஸ்ரீ சன்டீப் நாராயணனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்களுக்கு, மாறுகின்ற தாள லயத்தோடு பின்னிப் பிணைந்து ஈடுகொடுத்து செல்வன் ஹரிஷன் மிருதங்கத்தினை வாசித்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். கலை ஞானம்கொண்ட ஹரிசனை வழிநடாத்தி அரங்கேற்றத்துக்கு வழி சமைத்த குரு ஸ்ரீ.ஆனந்தநடேசன் அவர்களையும், ஊக்கப்படுத்திய பெற்றோரான ஸ்ரீகாந்தன் வத்ஷல்யா தம்பதிகளையும் வாழ்த்தி தனது பாராட்டை மேலும் தெரிவித்திருந்தார்.
‘செல்வன் ஹரிஷன் நிறைந்த கேள்வி ஞானம் கொண்டவர் என்பதை அவரின் இந்த மிருதங்க அரங்கேற்றம் நிரூபித்திருக்கின்றது. செல்வன் ஹரிசனின் சகோதரியான செல்வி. சிந்தியாவுக்கு தான் வயலின் கற்றுக் கொடுக்கும்போது ஹரிசன்; கலை ரசனையோடு அவதானித்துக் கேட்டுக்கொண்டிருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், கலைஞர்கள் கேள்விஞானம் கொண்டவர்களாகத் திகழவேண்டும்’ என சிறப்பு விருந்தினரான டாக்டர் லக்ஷ்மி ஜெயான் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் ஜோசனா சிறீகாந் வயலின்ää ஸ்ரீ.ஆர்.என். பிரகாஷ் கடம்ää செல்வன் மேவின் மகேந்திரன் மோஷிங், செல்வன் சிந்தியா சிறீகாந்தன் தம்புரா போன்ற பக்க வாத்தியக் கலைஞர்களோடு ஹரிசனின் மிருதங்க அரங்கேற்றம் சிறப்புற்றிருந்தது. செல்வன்.ஹரிசனின் குருவான ஸ்ரீ.கந்தையா ஆனந்தநடேசன் கெஞ்சிராவை மிகச் சிறப்பாக வாசித்து வித்தியாசமான முறையில் அரங்கேற்றத்தை மெருகூட்டியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் இடம்பெற்ற செல்வன் ஹரிசன் சிறீகாந்தனின் அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த மக்களோடு சிறப்பாக இடம்பெற்றது. பதினான்கு வயதுக் ஹரிசனின் இந்த மிருதங்கக் கலையை எதிர்காலத்தில் சிறப்புடன் முன்னெடுக்க வேண்டுமென யாவரும் வாழ்த்திச் சென்றமை மகிழ்வு தரும் விடயமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
14.9.2012.