- ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் 'நீர்வளையங்கள்' [தமிழியல் 1988], 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
அவரது நினைவாக கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரில் 28 (சனிக்கிழமை) 150 Borough Drive (North-west corner of McCowan Road and Ellesmere Road) உள்ள Scarborough City Hall Committee Room 1 இல் பிப 3.00 மணி தொடக்கம் பிப 6.00 மணிவரை இடம்பெறும்.
நாட்டுப்பற்றாளர்கள், தமிழ் உணர்வாணர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
தொடர்பு - 416 893 9545, 416 281 1165, 416 708 6813
தகவல்:
Tamil Creative Writers Association
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
416-281-1165
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.