குறும்பட வட்டம் - பகுதி இரண்டு.
நாள்: 10-12-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நாற்பது மாதங்களை கடந்துவிட்டது. குறும்பட வட்டத்தின் முதல் பகுதி சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. மிகுந்த பொருட்செலவின் காரணமாக இந்நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் தியேட்டர் லேப் அலுவலத்தில் மாற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சக நண்பர்கள் குறும்படங்களோடு, உலக அளவில் புகழ்பெற்ற குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது. சென்னை குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் எவ்விதக் கட்டணமுமின்றி இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம். மேலும் குறும்பட எடுக்க நினைக்கும் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.
மேலும் உலகின் மற்ற மொழிகளில் புகழ்பெற்ற படங்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு சீன்கள் தொகுக்கப்பட்டு அதுவும் குறும்பட வட்டத்தில் ஒளிபரப்பப்படும். இந்த காட்சிகள் உலகப் படங்களை பார்க்கும் ஆர்வத்தை ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தும்.
குறிப்பு: பவர் கட் காரணமாக நிகழ்ச்சியின் வழக்கமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
அக்காலம் இக்காலம் ஜெயராஜ் 12 நிமிடங்கள்
அம்மா வினு அர்விந்த் 8 நிமிடங்கள்
10 Minutes Ahmed Imamovic 10 நிமிடங்கள்
Baran (Two Scenes) Majid Majidi -
அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.