நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
அழகிய பெரியவன்
பாலை நிலவன்
யாழன் ஆதி
தமயந்தி
அஜயன் பாலா
நர்மதா
ப்ரவீண்
&
குட்டி ரேவதி
எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ! இந்த இயக்கத்துடன் வாசகர்களே உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட பெண்கவிஞர்களின் மொழியை அலசும் தொகுப்பு "ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த எழுத்துகளை முன்னிறுத்தும் குரல்". நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தை மொழியையும் முன்னிறுத்தும் "ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்"இலக்கியத்தின் ஆணாதிக்கக்குரலுக்கு எதிரான குரலே பெண்கவிதையின் உடல் மொழி! பெண்ணின் பாலியல் மொழி, உக்கிரமானதோர் அரசியல் வடிவம் பெற்ற பத்தாண்டுகளின் நிறைவைக் கொண்டாடும் நூல்! கவிஞர் குட்டி ரேவதி தமிழ் ஸ்டுடியோவில் எழுதி வந்த கட்டுரைத்தொடர் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. நான்தான் பதிப்பகம் அஜயன் பாலா புத்தகத்தை பதிப்பிக்கிறார். அனைவரும் விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.