காலம்: மார்ச் 4, 2012 , ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு
இடம்: கனடா சிறிசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கலாச்சார மண்டபம், 1 Golden Gate Court , Unit -1 (Brimly/Ellesmere சந்திப்புக்கு அருகாமையில்)
தற்போது சுவிசில் வாழ்ந்து வரும் சயந்தன் எழுதிய முதலாவது நாவலான “ஆறா வடு” நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரதும் வரவேற்பைப் பெற்றிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்த விடயங்கள் இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பயணம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் "நேரு ஐயா" என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் உதாரணம். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் "ஆறா வடு" முக்கியமான ஒரு நாவல். இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு -) 647-237-3619
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.