நண்பர்களே இன்றைய தமிழ் சினிமாவில் பணிபுரியும் பல உதவி இயக்குனர்கள், மற்ற பல உதவி கலைஞர்களுக்கு ஆங்கிலம் நிச்சயம் ஒரு சவாலான மொழிதான். ஆனால் திரைப்பட துறையில் பணியாற்றும் நண்பர்கள் நிச்சயம் கொஞ்சமாவது ஆங்கில மொழி கற்றிருக்க வேண்டும். பேச, புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் படங்களை விருதுகளுக்கு அனுப்பவும், உலக படங்கள் பற்றி நிறைய பேசவும், புரிந்துக் கொள்ளவும் கொஞ்சமாவது ஆங்கில அறிவு அவசியம். தமிழ் ஸ்டுடியோவில் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். திரைப்பட துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் சேரலாம். ஆங்கிலத்தில் பேச, எழுத நீங்களாகவே கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்கள் இனைந்து தங்கள் ஆங்கில மொழி புலமையை விரிவுப் படுத்திக் கொள்ளலாம். ஆங்கில பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகளும் நடக்கும். நண்பர்கள் கூடி தப்பு தப்பான ஆங்கிலத்தில் பேசியும், அதனை ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒருவர் சரி செய்வதுமே இந்த அமைப்பின் மையம்.
இங்கே நீங்கள் ஆங்கிலத்தில் தவறாக பேசினால் உங்களை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள். காரணம் வருகிற யாருக்கும் ஆங்கிலம் சரியாக தெரியாது. அவர்களும் கற்றுக் கொள்ளவே வருகிறார்கள். கற்றுக் கொடுக்க வருபவர் நிச்சயம் உங்களை சரிப்படுத்துவார். புண்படுத்த மாட்டார். வெளிநாடுகளில் நடக்கும் "Laughing Club" போல தமிழ் ஸ்டுடியோவின் இந்த அமைப்பிற்கு பெயர் "டாக்கிங் க்ளப்". ஒரு விசயத்தைப் பற்றி தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருப்பது, அதன் மூலம் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது. ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆர்வமிருக்கும் திரைப்பட துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் சேரலாம். வாருங்கள் ஆங்கிலம் வழி உலகறிவோம்.
தொடர்புக்கு. 9840698236
இப்படி ஒரு சிந்தனையை விதைத்தது நண்பனும், தமிழ் ஸ்டுடியோவின் இணை நிறுவனருமான குணா..
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.