யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அம்பிகைபாகன் பற்றி யாழ். கல்வியல்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் எழுதிய 'அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்' என்னும் நூல் வெளியீடும், அவரது துணைவியார் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகனின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் அக்டோபர் 19, 2012 அன்று யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் மகேந்திரம் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நூலை வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதியை அம்பிகைபாகனின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் மற்றும் நூலாசிரியர் முருகேசு கௌரிகாந்தன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மேற்படி நூலில் திரு.அம்பிகைபாகன் அவர்கள் ஆற்றிய எழுத்துலக, சமய, பதிப்பு , கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் மற்றும் அவரது வரலாறு பற்றிய விபரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது ஆளுமையினை நன்கு புரிந்துகொண்ட அறிஞர்கள் பலரின் அவர் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் பின் இணைப்பாகத் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் பற்றிய குறிப்புகளும், அம்பிகைபாகன் அவர்களது வாழ்வினை வெளிப்படுத்தும் நிழற்படங்களும், வாழ்த்துரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
தகவல்: கலாநிதி அம்பிகைபாகன் பாலசுப்ரமணியம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.