தோழமை மிகு நண்பர்களே! இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கு நடை பெறுகிறது, அமர்வு ஒன்றான பிரதிகள் மீதான வாசிப்பில் இலங்கை இனப்பிரச்சினை பின்புலத்தில் இதுவரை காலமும் அச்சில் பதிவாகி வெளிவந்த சிறுகதை, நாவல் தொகுதிகள், வரலாற்றுப் பதிவுகளை முன்னிறுத்தி பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடல் நடைபெறும். அமர்வு இரண்டான காலம் மீதான வாசிப்பில் போருக்குப் பிந்திய இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மாற்றங்களும் விளைவுகளும் தொடர்பான பல்வேறுபட்ட பார்வைகளைப் பேசும் காலம் மீதான உரையாடல் இடம்பெறும். அத்துடன் நூல் கண்காட்சியும் இடம்பெறும். அனைவரையும் அழைக்கிறோம். மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். நன்றி
காலம்: 25 நவம்பர் 2012 (ஞாயிறு), இலண்டன். ஞாயிறு காலை 10.00 மணி - மாலை 06.00 மணி வரை. Sivan Temple Hall, 4A Clarendon Rise, Lewisham, SE13 5ES
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.